Header Ads



ஸ்பெயினின் ஆற்றில் துயில்கொள்ளும் இஸ்லாமிய மாவீரன்



ஸ்பெனில் அமைந்துள்ள இந்த செனியல் நதியின் ஆழத்தில் ஏதோ ஒரு இடத்தில்தான் இஸ்லாமிய ஸ்பெனின் கடைசி தியாகியும், கிரநாடா படைத் தளபதியுமான மாவீரர் மூஸா பின் அபீ கஸ்ஸான் இன்னும் துயில்கொள்கிறார். 


கி.பி 1491 ஆண்டு இது போன்ற நாட்களில்தான் இஸ்லாமிய ஸ்பெனின் கடைசி கோட்டையான கிரனாடா இராச்சியம், கத்தோலிக்க காஸ்டாலிய மன்னர்களால் முற்றுகையிடப்படுகிறது, 800 ஆண்டுகள் சுடர்விட்ட ஒரு நாகரீகம் தனது இறுதி மூச்சை விட காத்திருந்தது. 


கிரநாடா இராஜ்ய மன்னர் அபு அப்துல்லா தனது படையோடும் பரிவாரத்தோடும் சரணடையவென பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. 


படைத் தளபதி மூஸா பின் கஸ்ஸான் அரச சபையில் நுழைகிறார். சரணடைவதுதான் முடிவான தீர்மானம் என்ற செய்தி அவர் காதுகளை எட்டிகிறது, மனம்  தாங்காமல் எழுந்து நின்று உரையாற்றுகிறார்:


'உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்ளப் போகிறீர்களா? இந்த கத்தோலிக்கர்கள் உடன்படிக்கைகளை நிறைவேற்ற மாட்டார்கள், உங்கள் கண் முன்னால் உங்கள் வீடுகளை உடைத்தார்களே! பள்ளிவாசல்களை இடித்தார்களே! பெண்களை மானபங்கப் படுத்த்தினார்களே! அப்பாவிகளை சித்திரவதை செய்தார்களே! 


ஆதலால் கிரனாடவை கையளிக்க, சரணடைந்தவர்கள் பட்டியலின் என் பெயர் இருப்பதை விட போரிட்டு அதனைப் பாதுகாக்க வீரமரணம் அடைந்தவர்கள் பட்டியலில் என் பெயர் இருப்பதே எனக்கு சிறந்தது' என்று சொல்லி முடித்தார். 


பின்னர் தனியாக எழுந்து சென்ற அவர், முற்றுகையிட்டிருந்த டஜன் கணக்கான எதிரிப்படைகளை கொன்றுவிட்டு வீரமரணம் அடைந்தார்.


சரணடைய மறுத்த வீரர் மூஸா பின் அபி கஸ்ஸான் பற்றி வரலாற்றாசிரியர் அன்டோனியோ அகபெல்லா கூறுகிறார்: 


'வீரர் மூஸா ஒரு அடங்காத பிசாசைப் போல கஸ்டாலிய படைகளுடன் சண்டையிட்டார், கத்தோலிக்க படைகளில் பெரும் தொகையினரை தனியாக வெட்டி வீழ்த்தினார், நீண்ட போராட்டத்தின் பின்னர் களைப்படைந்த அவர், செனியல் ஆற்றில் வீழ்ந்து மாயமானார். யாரும் அவரை கண்டுபிடிக்கவே இல்லை".


📖 அந்தலூசியாவில் இஸ்லாமிய அரசு 

✍ அப்தல்லாஹ் அன்னான் 

✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.