Header Ads



நுவரெலியா செல்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு


- செ.தி.பெருமாள் -


நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை குறித்து நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் காலநிலை மற்றும் அனர்த்தங்கள் குறித்து சில சமூக ஊடகங்கள் வெளியிடும் செய்திகளில் உண்மையில்லை என நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.


இந்த பொய்யான விளம்பரங்களினால் நுவரெலியாவிற்கு வருகை தரும் பலர் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


நுவரெலியா மாவட்டத்தில் அனர்த்தங்கள் அல்லது காலநிலை தொடர்பான தகவல்களைப் பெறும்போது, பொறுப்பான நிறுவனங்களால் வெளியிடப்படும் அறிவிப்புகளை மாத்திரம் கவனத்தில் கொள்ளுமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார். 

No comments

Powered by Blogger.