Header Ads



லொறிச் சாரதியின் மனிதாபிமானமற்ற செயற்பாடு


பூகொட பிரதேசத்தில் லொறியுடன் மோதி காயமடைந்த 83 வயதுடைய முதியவரை சிகிச்சைக்காக அழைத்து செல்வதாக கூறி , இடைநடுவே கைவிட்டு சென்ற லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கடந்த 9 ஆம் திகதி அதிகாலை 1.00 மணியளவில், பூகொட பாப்பிலியாவல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


சாரதியால் வீதியில் விட்டுச்செல்லப்பட்ட முதியவர், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பூகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


விபத்தின் போது 83 வயதுடைய முதியவர் மீது லொறி மோதியதுடன், அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக கூறி லொறி சாரதி அவரை லொறியில் ஏற்றிச் சென்றுள்ளார்.


இருப்பினும், விபத்து நடந்த இடத்திற்கு அருகில் காயமடைந்த முதியவரை இறக்கிவிட்டு லொறியின் சாரதி தப்பியோடிய விதம் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.


இதன்படி, தப்பியோடிய நபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை பூகொட பொலிஸார் ஆரம்பித்த நிலையில், பன்னிபிட்டிய பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேகநபர் பூகொட நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.