அவுட் ஆனார் டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்காவின் கொலராடோ உச்ச நீதிமன்றம் இது குறித்த தீர்ப்பினை அறிவித்துள்ளது.
அமெரிக்க அரசியல் அமைப்பின் பிரகாரம் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அமெரிக்க அரசியல் அமைப்பின் 14ஆம் திருத்தச் சட்டத்தின் 3ஆம் பிரிவின் பிரகாரம் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவி வகிக்க தகுதியற்றவர் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதேவேளை, இந்த தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்ய உள்ளதாக ட்ரம்ப் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அமெரிக்காவில் இடம்பெற்ற கலவரத்துடன் ட்ரம்ப் தொடர்புபட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பதவிப் பிரமாணத்தின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மீறும் வகையில் ட்ரம்ப் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இதேவேளை, ட்ரம்பிற்கு எதிரான தீர்மானம் குறித்து ஜனாதிபதி வேட்பாளரான விவேக் ராமசாமி கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். உச்ச நீதிமன்றின் இந்த தீர்ப்பானது ஜனநாயகத்திற்கு எதிரானது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ட்ரம்ப் தேர்தலில் போட்டியிடுவதனை பல்வேறு வழிகளில் தடுக்க முயற்சிக்கப்பட்டதாகவும் இறுதியில் அரசியல் சாசனத்தைப் பயன்படுத்தி தடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் எதிரிகளை அடக்கும் முயற்சியில் ஜனநாயகக் கட்சி ஈடுபட்டுள்ளது என விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்காவில் முதல் தடவையாக ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment