ஆரம்பத்தில் வாய் பேச முடியாத குழந்தை, பின்னர் இறைவன் நிகழ்த்திக்காட்டிய் அற்புதம்
பின்னர் மூன்றாம் வயதில், இவர் முதல் முறையாக பேசிய வார்த்தை கஹ்ஃப் அத்தியாயத்தின் அல் குர்ஆனின் வசனங்களாகும்..
மூன்று வயதிலேயே சூரத் அல்-கஹ்ஃப், மர்யம், அம்மா ஜுஸ்வும் மற்றும் பல ஹதீஸ்களையும் மனப்பாடம் செய்து, குறுகிய காலத்தில் திருக்குர்ஆனை மனப்பாடம் செய்த வாழும் அதிசயத் திறமைசாலி இந்த அல்ஜீரியச் சிறுவன்.
அஃபாஸி உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற காரிகள் ஓதுவதைத் தொடர்ந்து கேட்டு பல சூராக்களை முதன்முறையாக மனப்பாடம் செய்ததாக அவரது தாயார் கூறுகிறார்.
டிவியில் குர்ஆன் ஓதுவதை கேட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அலைவரிசையை மாற்றி, கார்ட்டூன்கள் போன்ற நிகழ்ச்சியை வைத்தால் தனக்கு குர்ஆன் தான் வேண்டும் என்று பிடிவாதம் கொள்வது அவரது குழந்தைப் பருவத்தின் வழக்கமான அனுபவமாகும்...
குர்ஆன் ஹிஃப்ழ் கல்லூரிக்குச் செல்லாமல் அஃபாசியின் சேனலில் குர்ஆன் நிகழ்ச்சி கேட்டுத்தான் குர்ஆனின் பெரும்பாலானவை யை மனப்பாடம் செய்தார்.
(பின்னர் தஜ்வீத் முறைப்படி ஓதுவதற்கு பிற உஸ்தாத் மார்களிடமிருந்து கற்றுக் கொண்டார்.)
சிறு வயதில் தாயார் ஓதக்கூடிய திக்ருகள் மற்றும் குர்ஆன் இவற்றை கேட்டுத்தான் இவர் தூங்குவார். அந்த அளவுக்கு
குர்ஆனுடன் ஒன்றிணைந்து இருந்தார்.
உலகின் சிறந்த தஜ்வீத் முறைப்படி ஓதும் வயது குறைந்த காரியாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அரபு மொழியில் அழகான நடையில் இந்த சிறுவன் பேசுவதைக் கேட்டால் வியப்பாக இருக்கும்.
Sirajudheen
Post a Comment