Header Ads



ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக மற்றுமொரு வழக்கு


ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக நட்டஈடு வழக்குகளை தாக்கல் செய்ய அகில இலங்கை நுகர்வோர் சங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.


நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்களான மகிந்த ராஜபக்ச, பசில் ராஜக்ச உள்ளிட்டோர் பொறுப்பு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்து.


இந்த தீர்ப்பிற்கமைய நட்டஈடு வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அகில இலங்கை நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் மிலிந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.


அப்போதைய அரசும், அதிகாரிகளும் எடுத்த தவறான பொருளாதார முடிவுகளால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டதாக வழங்கப்பட்ட இந்த தீர்ப்பின்படி இழப்பீட்டு வழக்குகள் தொடரலாம் என ஏற்கனவே சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 


அதற்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இவ்வழக்குகளை சிவில் வர்த்தக நீதிமன்றம் அல்லது மாவட்ட நீதிமன்றத்திற்கு ஒதுக்கலாம் என சட்ட ஆலோசனை கிடைத்துள்ளதாக அகில இலங்கை நுகர்வோர் சங்கம் தற்போது இது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


இந்நிலையில் எரிவாயு தட்டுப்பாட்டினால் மாத்திரம் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், ஆனால் இன்றும் அரசாங்கம் அதற்கு நீதி வழங்கவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


முன்னைய ஆட்சிக் காலத்தில் பல்வேறு துறைகளில் எரிவாயு தொடர்பில் பல பொருளாதாரக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றிற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் எவ்வித பயனும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.