Header Ads



இஸ்ரேல் இராணுவத்தில் இணைய மறுத்த, இளைஞன் இஸ்ரேல் சிறையில் அடைப்பு


இஸ்ரேல் இராணுவத்தில் இணைய மறுத்த் 18 வயது இளைஞனை இஸ்ரேல் சிறையில் அடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ஹமாஸ் தாக்குதலுக்கு பின்னர் அரசியல் காரணங்களுக்காக இராணுவத்தில் இணைய மறுத்தமைக்கு கைது செய்யப்பட்ட முதல் நபராக தால் மிட்னிக் என்ற இளைஞர் கருதப்படுகிறார்.


இந்நிலையில், குறித்த இளைஞனுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இராணுவ சிறைத் தண்டனை விதிக்கபட்டுள்ளது.


அத்தோடு, சம்பவம் தொடர்பில் எக்ஸ் செயலியில் தால் மிட்னிக்கின் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.


தால் மிட்னிக் அந்த காணொளியில் கூறுவதாவது, “படுகொலைக்கு படுகொலையால் தீர்வு காண முடியாது, காசா மீதான சட்டத்திற்குபுறம்பான தாக்குதல் ஹமாஸ் நடத்திய கொடூரமான படுகொலைக்கு தீர்வாகாது, வன்முறை வன்முறையைத் தீர்க்காது. அதனால்தான் நான் மறுக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.


இந்நிலையில், அவர் மத்திய இஸ்ரேலில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் சிறை வைக்கப்பட்டுள்ளதுடன் பொதுவாக இஸ்ரேல் இராணுவ சேவையை மறுப்பது என்பது சட்டத்தின் படி குற்றமாகும்.


தொடர்ந்தும் அவர் கூறுகையில், ஹமாஸ் தாக்குதல் கொடூரம் என்றால், இஸ்ரேலின் பழி வாங்கும் நடவடிக்கையும் அதை விட கொடூரம். ஹமாஸ் மீது மட்டுமல்ல, ஒட்டுமொத்த பலஸ்தீன மக்கள் மீதும் இஸ்ரேல் தனது கொடூர முகத்தை வெளிக்காட்டுகிறது.


அதிக வன்முறை பாதுகாப்பைக் கொண்டுவரும் என்பதை நம்ப மறுப்பதாக கூறும் தால் மிட்னிக், பழிவாங்கும் போரில் பங்கேற்க விரும்பவில்லை என துணிவுடன் தெரிவித்துள்ளார்.


இதனிடையே, 30 நட்கள் தண்டனைக்கு பின்னரும் தால் மிட்னிக் இராணுவ சேவைக்க் மறுப்பு தெரிவித்தால், தண்டனை காலம் நீளலாம் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.