Header Ads



அரசாங்கத்தின் தேர்தல் தந்திரங்களை, அம்பலப்படுத்தியுள்ள ஹர்ஷ டி சில்வா


பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்கள்.


தேர்தலை இலக்காகக் கொண்டே அரசாங்கம் வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்கிறது.


பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு 50,000 மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்து நுகர்வோருக்கு குறைந்த விலையில் அரிசியை வழங்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக பாரளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.


இப்பெரும் போகத்தில் இரண்டு மில்லியன் மெட்ரிக் டொன் அரிசி பெறப்படவுள்ளது. நாட்டின் அரிசி தேவையில் 80 வீதம் இந்த பருவத்தில் இருந்து பெறப்பட உள்ளது. இவ்வாறான நிலையில் அரிசியை இறக்குமதி செய்தால் ஒரு கிலோ அரிசியின் விலை 100 ரூபாவாக குறையும்.இதனால் உள்நாட்டு விவசாயிகள் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்படுவார்கள்.


ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், 5000 மெட்ரிக் டொன் வெப்பநிலை மற்றும் ஈரப்பதன சேமிப்பு களஞ்சிய நிர்மாணிப்பு முன்னெடுப்புகள் 4 வாரங்களில் நிறைவடையும்.4 வாரங்களில் கூட்டுறவு சங்கம் ஊடாக சக்தி அரிசி வேலைத்திட்டம் அரம்பிக்கப்பட்டு அரிசி மாபியா ஒழிக்கப்படும்.


வெளிநாட்டிலிருந்து 50,000 மெட்ரிக் டொன் கீரி சம்பாவை கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகக் கேள்விப்படுகிறோம். அரிசி கொண்டு வர அனுமதி பெற்று உடனே அரிசியைக் கொண்டு வர முடியாது.அரிசி கொண்டு வர 15 முதல் 20 நாட்கள் ஆகும். துறைமுகத்தில் அரிசி கப்பல் நங்கூரமிட்டால், பண்டிகை காலத்தில் அரிசியை விநியோகிக்கலாம்.துறைமுகத்தில் அரிசிக் கப்பல் ஒன்று நங்கூரமிட்டுள்ளதா என்ற சந்தேகமும் எமக்கு உள்ளது.


வடக்கு மற்றும் கிழக்கில்,அறுவடை ஜனவரி 15 ஆம் திகதி ஆரம்பமாகிறது. வடக்கு, கிழக்கில் உள்ள விவசாயிகள் நெல் அறுவடை செய்யும் போது,அரசாங்கம் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை துறைமுகத்தில் இறக்கி விடும்.இப்பருவத்தில் இருந்து இரண்டு மில்லியன் மெட்ரிக் தொன் அரிசி பெறப்பட உள்ளது.


இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டால் ஒரு கிலோ அரிசியின் விலை 100 ரூபாவாக குறையும். அப்படியானால்,உள்நாட்டு விவசாயிகளுக்கு என்ன ஆகும்? விவசாயி என்ன ஆனாலும் பரவாயில்லை என்று கூறி குறைந்த விலையில் அரிசியை நுகர்வோருக்கு வழங்க அரசாங்கம் முயற்சிப்பது பொதுத்தேர்தல் நெருங்கும் செய்தியை காட்டுகிறது.


ஒரு கிலோ கீரி சம்பா 320 முதல் 340 ரூபா.இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? இல்லை.வியாபாரிகள் விரும்பிய விலைக்கு அரிசியை விற்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரு கிலோ சிவப்பு அவித்த அரிசியை 180 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர்.கீரி சம்பா ஏன் 320 முதல் 340 வரை விற்கப்படுகிறது?


8 மாவட்டங்களில் உள்ள 300 சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களையும் 10,000 விவசாயிகளையும் ஒன்றிணைத்து சக்தி அரிசி கூட்டுறவு சங்கத்தை நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கியது.இதன் மூலம் பெறப்படும் அரிசி,சக்தி என்ற பெயரில் பல்பொருள் அங்காடிகளில் கூட விற்கப்பட்டது.இந்த வேலைத்திட்டத்தை கோட்டாபய ஜனாதிபதி பதவிக்கு வந்து ஒரு வாரத்திலயே இடைநிறுத்தினார்.


தற்போதைய அரசாங்கம் விவசாயிகளின் மண்வெட்டி,உழவு இயந்திரம் மற்றும் உரங்கள் மீது ஜனவரி முதலாம் திகதியில் இருந்து VAT வரியை அறவிடுகிறது.இந்நிலையில் ஒரு சாதாரண விவசாயியால் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தேவைக்கேற்ப சந்தைக்கு விடப்படும். இதன் மூலம் அரிசி வியாபாரிகள் கோடிக்கணக்கில் இலாபம் சம்பாதிக்கிறார்கள்.

இதனால்,சாதாரண விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.


சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களை வலுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவும் நுகர்வோருக்கு சாதாரன விலை கிட்டும் வகையிலும் நிலையான தீர்வு தேவை.நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஸ்தாபிக்கப்பட்ட சக்தி அரிசி வேலைத்திட்டம்,சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள், விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்கு ஒரு முறையான நியாயமான தீர்வை தர செயல்பட்ட முதல் திட்டமாகும்.


வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை கட்டுப்படுத்தும் விவசாயிகளின் தேவைகளுக்காக நிர்மானிக்கப்பட்ட 5000 மெட்ரிக் டொன் களஞ்சியசாலையின் நிர்மானப் பணிகளை கோட்டாபய ஆட்சிக்கு வந்து முதல் வாரத்திலயே நிறுத்தினார். பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்படும் உப்பை குளிர்பதன பெட்டியில் வைத்த பின் நுகர்வோருக்கு வழங்கப்படுகிறது.இதன் மூலம்,தேசிய உப்பு உற்ப்பத்தியாளர்களுக்கு என்ன நடக்கும்?

No comments

Powered by Blogger.