இலங்கை சிறுமி உலக சாதனை
சதுரங்கப் போட்டியில் 8 வயதிலேயெ வெற்றி பெற்று இலங்கை தமிழ் சிறுமியொருவர் உலக சாதனை படைத்துள்ளார்.
ஐரோப்பிய பிளிட்ஸ் சதுரங்கப் சாம்பியன்ஷிப் போட்டியில் லண்டனைச் சேர்ந்த 8 வயதான இலங்கை தமிழ் சிறுமி போதனா - சிவானந்தன் Bodhana Sivanandan சிறந்த பெண் வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
லண்டனில் உள்ள ஹாரோவைச் சேர்ந்த போதனா - சிவானந்தன் என்ற சிறுமி இறுதிச் சுற்றில் இரண்டு முறை ரோமானிய சாம்பியனான 54 வயதான கிராண்ட்மாஸ்டர் விளாடிஸ்லாவ் நெவெட்னிச்சியுடன் டிரா செய்தார்.
சர்வதேச மாஸ்டர் மற்றும் பிரித்தானிய மகளிர் பயிற்சியாளர் லோரின் டி'கோஸ்டாவை வென்றுள்ளார்.
ஒரு போட்டி விளையாட்டில் கிராண்ட்மாஸ்டருக்கு எதிராக தோல்வியைத் தவிர்க்கும் இளைய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
எட்டு வயது சிறுமி "வியக்கத்தக்க முடிவை" அடைந்ததாக ஐரோப்பிய சதுரங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
போதனா சிவானந்தனின் வெற்றிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மேலும், உலக சாதனைப் புத்தகத்தில் இச் சிறுமியின் பெயரை பதிவு செய்து சாதனைச் சிறுமியாக பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போதனா சிவானந்தன் பிள்ளைக்கு எமது இதயங் கனிந்த நல்வாழ்த்துக்கள், வாழ்க்கையில் இதைவிட மேலும் பல சாதனைகளைச் செய்து மனித குலத்தை சர்வதேச ரீதியாக மேன்படுத்த அந்தப்பிள்ளை எதிர்காலத்தில் பங்காளராக திகழ்வதற்காக எங்கள் பிரார்த்தனைகள்.
ReplyDelete