இஸ்லாமிய ஸ்பெயின் இறுதிமூச்சை, சுவாசித்தபோது நிகழ்ந்த முக்கிய வீரமரணம்
கி, பி 1492 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், இது போன்ற ஒரு தினத்தில்தான் இஸ்லாமிய ஸ்பென் தனது இறுதி மூச்சை சுவாசித்துக் கொண்டிருந்தது.
முஸ்லிம் கிரனாடா அரசு தனது படையோடும், பரிவாரங்களோடும் கத்தோலிக்க காஸ்டிலிய படைகளிடம் சரணடைவதாக முடிவுக்கு வந்தது.
அப்போதுதான் படைத் தளபதி மூஸா பின் அபீ கஸ்ஸான் எழுந்து நின்று பின்வரும் வாசகத்தை மொழிந்தார்: 'கிரனாடவை கையளிக்க, சரணடைந்தவர்கள் பட்டியலின் என் பெயர் இருப்பதை விட போரிட்டு அதனைப் பாதுகாக்க வீரமரணம் அடைந்தவர்கள் பட்டியலில் என் பெயர் இருப்பதே எனக்கு சிறந்தது' என்றார்.
பின்னர் தனியாக எழுந்து சென்ற அவர், முற்றுகையிட்டிருந்த டஜன் கணக்கான எதிரிப்படைகளை கொன்றுவிட்டு வீரமரணம் அடைந்தார்.
Post a Comment