Header Ads



அலவி மௌலான மண்டபத்தை விகாரையுடன் இணைக்க சதி - ரணிலின் சகா தீவிர முயற்சி. மகிந்தவும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் தடுப்பார்களா..?


கொழும்பு மருதானை,ஆர்னோல்ட் ரத்நாயக்க மாவத்தையில் இமாமுல் அரூஸ் வீதிக்குள் பிரவேசிக்கும் சந்தியில் அமைந்துள்ள அலவி மௌலான சன சமூக விழா மண்டபத்தை உடைத்து அதற்கு முன்பாக அமைத்துள்ள பௌத்த விகாரையுடன் இணைக்கும் பணிகள் தற்போது வெளிப்படையாகவே முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


அலவி மௌலான மண்டபத்திற்கு முன்பாக விகாரையுடன் இணையும் விதமாக நின்ற புத்தர் சிலைகள் வைக்கும் பணிகள் தற்போது நிறுவப்பட்டு வருகின்றன.


கொழும்பு மாநாகர சபைக்குச் சொந்தமான இக்கட்டிடம் விகாரையுடன் இணைக்கும் முயற்சி குறித்து கொழும்பு மாநகர ஆணையாளரிடம் பொது மக்களால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தும் இந்த முயற்சியை தடுக்க முடியாமல் போயுள்ளது.


கொழும்பு மாநகர ஆணையாளர் இது பிழையான விடயம் என முன்வந்தாலும், ஜனாதிபதியுடன் தொடர்புகளை பேனும், ஜனாதிபதிக்கு நெருங்கிய ஐக்கிய தேசியக் கட்சியின் அப்பிரதேச அமைப்பாளரான கித்சிறி ராஜபக்சவின் கூடிய செல்வாக்கு இங்குள்ளதால் தெரிவிக்கப்படுகிறது.


ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டு இடதுசாரி அரசியலில் ஈடுபட்ட, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரகா பண்டாரநாயக்க குமாரதுங்க,மஹிந்த ராஜபக்ச போன்ற தலைவர்களின் விசுவாசியான பழம் பெரும் அரசியல்வாதியான அலவி மௌலான அவர்களால் மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்ட கட்டிடமே இவ்வாறு சேத்த்திற்குள்ளாகி வருகிறது.


இந்த அத்துமீறிய செயற்பாட்டை தடுத்து நிறுத்த தற்போதுள்ள ஆளுந்தரப்பு முஸ்லிம் அரசியல்வாதிகள் மஹிந்த ராஜபக்ச அவர்கள் ஊடாக தடுத்து நிறுத்தி தலைநகரில் புதிதாக உருவெடுக்கும் இத்தகைய ஒருதலைபட்ச இன ஐக்கியத்திற்கு பங்கம் விளைக்கும் செயற்பாடுகளை தடுத்த நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments

Powered by Blogger.