Header Ads



கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் பனடோல் தூள் அல்லது மாவாக மாறுவது எப்படி..? அமைச்சருக்கே குழப்பம்


சோதனையின் போது கைப்பற்றப்பட்ட சில போதைப்பொருட்கள் பனடோல் தூள் அல்லது மாவு என அடையாளம் காணப்பட்டதை அடுத்து, கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பான பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பதை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஒப்புக்கொண்டார். 


ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை கொண்டு செல்வதை கண்காணிப்பதற்கு முறையான சட்டங்கள் இல்லை என்பதை ஒப்புக்கொண்டார்.


மேலும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் தான் சோதனைக்காக ஒப்படைக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க எந்த அமைப்பும் இல்லை என்றார். 


"பொலிஸாரால் போதைப்பொருள் அல்லது மாவு தான் கைப்பற்றப்பட்டதா மற்றும் இடமாற்றங்களுக்கு இடையில் அது குளறுபடி செய்யப்பட்டதா என்பதை நாங்கள் உறுதியாக கூற முடியாது," என்று அமைச்சர் தெரிவித்தார்.


எவ்வாறாயினும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை களஞ்சியப்படுத்துகையில் எந்தவிதமான மோசடி நடவடிக்கைகளும் இடம்பெறாமல் தடுக்குமுகமாக கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 


கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை கொண்டு செல்லும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொலிஸாருடன் கலந்துரையாடப்பட வேண்டுமென நீதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. பொலிஸாரால் கைப்பற்றப்படும் பெருந்தொகையான போதைப் பொருட்கள் இரு சாராருக்கும் இடையில் கைககள் சந்தோசமாக மாற்றிக் கொண்ட பிறகு அவை இரசாயனப் பரீட்சையின் பின் பனடோல் தூளாக அல்லது கோதுமை மாவாக மாறும் சமாச்சாரம் கடந்த பல தசாப்தங்களாக நடைபெற்று வரும் நாடகமாகும். அவற்றுக்கு எதிரான சட்டங்கள் இந்த நபர் கூறுவது போல் ஒருபோதும் நிறைவேற்றப்படமாட்டாது. ஏனெனில் அது தியவன்னாவ மகோடிஸ்களின் வருமானத்தைப் பாதிக்கும். இவை வெறும் வெற்றுச் செய்தி மாத்திரம் தான்.

    ReplyDelete

Powered by Blogger.