Header Ads



நீர்கொழும்பு சென் ஜோசப் வைத்தியசாலை மீள் ஆரம்பம்

-  Ismathul Rahuman -


நீர்கொழும்பு சென் ஜோசப் வைத்தியசாலை நீண்ட காலத்திற்குப் பின் புதிய நிர்வாகத்தின் கீழ் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


     சுமார் 20 வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்த    Kids & Teen Medical Group, Asia Corp Holdings and Healthy Life Clinic ஆகியவற்றை நடாத்திச் செல்லும் சுனில் டி சில்வா, சிறுவர் வைத்திய நிபுனர் டாக்டர் ஜென்சிறி டி சில்வா தம்பதியினறே சென் ஜோசப் வைத்தியசாலையை பொறுப்பேற்று புனர்நிர்மாணம் செய்து திறந்துள்ளனர் 


    நான்கு மாடிகளைக்கொண்ட  இவ் வைத்தியசாலையில் 52 கட்டில்கள் உள்ளன. 45 விசேட வைத்தியர்களின் சேவைகளை இங்கு பெற்றுக்கொள்ள முடியும்.  அதற்காக சகல வசதிகளுடனான 45 செனலிங் காமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கண் சத்திரசிகிச்சை கூடம், விசேட சிறுவர் வார்ட்,  அதி தொழில் நுட்பத்தைக்கொண்ட ஆய்வு கூட வசதி, 24 மணி நேர அவசர சேவை பிரிவு, அவசர அம்பியுலன்ஸ் சேவை போன்றவற்றை இங்கு பெற்றுக்கொள்ள முடியும்.  இலங்கையில் தனியார் வைத்தியசாலையில் முதன் முதலாக இங்கேயே  டிஜிடல் எக்ஸ் கதிர் ( Digital X Ray) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக  பிரதம நிறைவேற்று அதிகாரியும் பிரதம நிதி அதிகாரியுமான சுனில் டி சில்வா கூறினார். அவர் மேலும் கூறுகையில் வெளி நோயாளர் பிரிவில்(OPD) இன்சூரன்ஸ் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


இதனால் இன்சூரன்ஸ் காட் உள்ளவர்கள் நேரடியாக  வெளி நோயாளர் பிரிவில் மருந்தை எடுத்ததும் இன்சூரன்ஸ் மூலம் செலுத்த முடியும். வலமையாக ஒருவர் மருந்து எடுத்தால் அதன் பற்றுச் சீட்டுக்களை தான் தொழில் செய்யும் நிறுவனத்திற்கு கொடுத்து நிறுவனம் காப்புறுதி நிறுவனத்திற்கு அனுப்பி அங்கிருந்து பணம் உரியவருக்கு செலுத்தப்படுகின்றன. இதனால் காலதாமதங்களும் பணத்தைக் கூடுதலாக செலுத்த வேண்டிய நிலமை ஏற்படுகின்றன. எமது முறையினால் கட்டனங்கள் அதிகரிப்பதில்லை. இவ்வாறே அமெரிக்காவிலும் நடைமுறைப்படுத்தப்படுவதாக கூறினார்.


 சுனில் டி சில்வா மேலும் கூறுகையில் 7 பேர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட எமது நிறுவனத்தில் தற்போது 120 பேர் உள்ளனர். தலைமைத்துவ பயிற்சி வழங்குவதும் எமது நோக்கம். பணம் சம்பாதிப்பது எமது நோகொகமல்ல.  நாம் எந்தவொரு டாக்டருக்கும் சொல்லமாட்டோம் இந்த இந்த பரிசோதனைகள் செய்யுங்கள் என்று. தேவைப்படு சாட்சியங்களுக்காக பரிசோதனைகள் செய்யப்படும் என்றார்.


No comments

Powered by Blogger.