Header Ads



தாய்க்காக காத்திருந்த மகன், பஸ் மோதி வபாத்


மட்டக்களப்பு - ஆறுமுகத்தான் குடியிருப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் 16 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம்  சனிக்கிழமை  (16)  பதிவாகியுள்ளது.


ஏறாவூர் தாமரைக்கேணியை சேர்ந்த அமீர்தீன் யாசீர் அறபாத் என்ற சிறுவனே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


கல்முனைக்குச் சென்ற தாயின் வருகை  எதிர்பார்த்து பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த சிறுவன் தாயைக்  கண்டதும் பிரதான வீதியை கடக்க முற்பட்டபோது   தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு சொந்தமான  பஸ் ஒன்றின் மீது மோதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்


குறித்த பஸ்ஸின் சாரதி ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சிறுவனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


 பேரின்பராஜா சபேஷ் 

No comments

Powered by Blogger.