Header Ads



பிரதமர் பதவிக்கு, கடும் போட்டி


2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து, கூட்டணி அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி பேச்சுகளில் ஈடுபட்டு உள்ளது.


மொட்டுக் கட்சியில் இருந்து விலகி சுயாதீனமாக செயல்படும் எம்.பிகளின் சுதந்திர மக்கள் சபையை ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இணைத்துக்கொள்ள முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


இந்த நிலையில், இவ்வாறு உருவாக்கப்படும் புதிய கூட்டணியில் டலஸ் அழகப்பெருமவுக்கு பிரதி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமென்ற நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளது.


எனினும், பிரதி தலைவராக நியமிக்கப்படுபவருக்கு பிரதமர் பதவியை வழங்க வேண்டுமென்பது பொதுவான கருத்தாக உள்ளதால் குறித்த நிபந்தனையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, சரத் பொன்சேகா, ரஞ்ஜித் மத்தும பண்டார, ஹர்சடி சில்வா மற்றும் கூட்டணி கட்சிகளின் பலர் பிரதமர் பதவியை பெற்றுக்கொள்வதற்கான நகர்வுகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.