Header Ads



எங்களை மன்னிக்கவும்...



தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட இரத்து மற்றும் தாமதங்கள் உள்ளிட்ட பயண இடையூறுகளால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மன்னிப்புக்கோரியுள்ளது.


இந்த காலகட்டத்தில், இரண்டு ஏர்பஸ் ஏ330 விமானங்கள் பல நாட்கள் சேவையில் ஈடுபடாமையால் விமான நிறுவனம் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது.


உலகளாவிய விநியோக பற்றாக்குறை மற்றும் பாரிஸில் டயர் வெடித்த சம்பவம் என்பன ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சவால்களாக அமைந்துள்ளன.


அதே நேரத்தில், இரண்டு உதிரி இயந்திரங்கள் மற்றும் புதிதாக குத்தகைக்கு எடுக்கப்பட்ட யு320 விமானத்தைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை தவிர்க்க முடியாத விமான இரத்து மற்றும் தாமதங்களுக்கு வழிவகுத்துள்ளன.


இந்த நிலையில், பண்டிகைக் காலத்தில் பயணிகளின் பயணத் திட்டங்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.


மேலும், வரும் நாட்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எதிர்பார்க்கப்படுவதோடு அண்மையில் குத்தகைக்கு எடுக்கப்பட்ட யு320 விமானம் ஏற்கனவே சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.


தொடர்ந்து, இரண்டு யு320 விமானங்கள் அடுத்த வாரத்தில் மாற்றப்பட்ட இயந்திரங்களுடன் சேவைக்குத் திரும்ப உள்ளதோடு ஏர் பெல்ஜியத்தின் காப்புப்பிரதி யு330 இந்த வார இறுதியில் வரவிருக்கிறது.


அத்துடன், சேவைகளில் ஈடுபடாமல் இருந்த இரண்டு விமானங்களும் மீண்டும் சேவைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.