Header Ads



ஹட்டன் ஜும்ஆ பள்ளிவாசலில் தாக்குதல்: காவலாளி உயிரிழப்பு


ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார்.


மேலும் பள்ளிவாசலில் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு , பணம் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த கொலை சம்பவம் இன்று(9) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


ஹட்டன், ஹிஜிரபுர பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய சி.எம். இப்ராஹிம் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.


இவர் ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் சுமார் இரு வருடங்களாக காவலாளியாக பணியாற்றி வந்தவர்.அவரின் தலைப்பகுதியிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


" அதிகாலை ஒரு மணியளவில் சுவர் ஏறி குதித்து பள்ளிவாசலுக்கு வந்த நபரொருவர், காவலாளியின் ஓய்வறைக்கு சென்றுள்ளார்.


பின்னர் வெளியே வந்து உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துச்சென்றுள்ளார்." என ஹட்டன் பள்ளிவாசலின் நிர்வாக சபை தெரிவித்துள்ளது.


பள்ளிவாசலின் உண்டியல் பல தடவைகள் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றாமல் இருப்பதற்காகவே காவலாளி நியமிக்கப்பட்டார் என்று கூறியுள்ளனர்.


நபர் பள்ளிக்குள் வருவது, உண்டியலை உடைப்பது போன்ற காட்சிகள் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.


பரிசோதனையின் பின்னர் உயிரிழந்தவரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு அனுப்பட்டது.


கொலையாளியை கைது செய்வதற்கான விசாரணை, தேடுதல் வேட்டையில் ஹட்டன் காவல்துறையினர் இறங்கியுள்ளனர். IB

No comments

Powered by Blogger.