Header Ads



ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்த நாசகார பொருட்கள்


ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கையில் உள்ள போலி பெறுநர்களுக்கு அனுப்பப்பட்ட 43 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதிமிக்க போதைப்பொருள் அடங்கிய பல சரக்குகளை இலங்கை சுங்கப் பிரிவினர் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் கைப்பற்றியுள்ளனர்.


சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள், குறித்த இடத்தில் மேற்கொண்ட விசே கண்காணிப்பையடுத்து, கடந்த வார இறுதியில் ஜேர்மனி மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து அனுப்பப்பட்ட 25 போதைப்பொருள் பொதிகளைக் கண்டறிந்தனர்.


அந்த பொதிகளில் 1.74 கிலோகிராம் எடையுள்ள 'குஷ்' என்ற கஞ்சா ரகமும், மெத்தம்பெட்டமைன் மருந்தில் 2,193 எக்ஸ்டசி மாத்திரைகளும், 29 கிராம் அம்பெட்டமைன் மருந்து வகைகளும் இருந்தன.


கொழும்பு, பத்தரமுல்லை, மஹரகம, பொரலஸ்கமுவ, பாணந்துறை, மொரட்டுவ மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் உள்ள பெறுநர்களுக்கு இந்தப் பொதிகள் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அவை அனைத்தும் போலியான முகவரிகள் என கண்டறியப்பட்டுள்ளதாக சுங்கப் பேச்சாளர் சிரேஷ்ட பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.


CME இன் தபால் திணைக்கள அதிகாரிகளுடன் சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டதுடன் கடத்தல் பொருட்கள் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

No comments

Powered by Blogger.