ராஜபக்சவினர் பதுக்கியுள்ள நிதியை மீட்க சந்திரிக்கா ஆலோசனை
இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தினர் திருடிய பணத்தை திரும்ப பெற்றால் பொதுமக்களிடம் வரி வசூலிக்க வேண்டிய அவசியம் இருக்காது என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடுத்தர வர்க்கத்தினருக்கு வரி அதிகரிப்பை மேற்கொள்வதற்கு முன், ராஜபக்ச குடும்பத்திடமிருந்து திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தினர் திருடிய பணத்தை திரும்பப் பெற்றால் பொதுமக்களிடம் வரி வசூலிக்க வேண்டிய அவசியம் இருக்காது. வரிகளை அதிகரிப்பதற்கு பதிலாக இழந்த நிதியை மீட்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
ஜனவரி மாதம் முதல் வரி அதிகரிப்பினால் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட உள்ளது. நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் மீது வரி விதிக்கப்படக்கூடாது.
ராஜபக்ச குடும்பத்தினர் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பதுக்கி வைத்துள்ள நிதியை மீட்பதே இதற்கான தீர்வாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜபக்ஸாக்கள் நாட்டைச் சூறையாடி, நாட்டின் சொத்துக்களைக் களவாடி உள்நாட்டிலும் வௌிநாடுகளிலும் பதுக்கி வைத்திருப்பது போல சுனாமியின் போது இலங்கைக்குக் கிடைத்த கோடான கோடி டொலர்கள் ட்ராப்டுகளைச் சந்திரிகா அம்மையார் தம்பி அனுரா பண்டாரநாயக்கா மூலம் மாற்றி எடுத்தார். அந்த பணமும் கோடான கோடியிருக்கும். அந்தப்பணத்தையும் திருப்பி திறைசேரிக்கு ஒப்படைத்தால் நாட்டின் பல ஆயிரம் பிரச்சினைகளை இலகுவாகத் தீர்த்துக் கொள்ளலாம். சந்திரிகா அம்மையார் அவர்களே, அந்த உதவியை நாட்டுக்காக செய்வீர்களா?
ReplyDelete