ஒரு அரபு கிராமவாசி நபிகளாரின், ரவ்ளா முன் நின்று அல்லாஹ்விடம் உரையாடிய போது...
அற்புதமான அவரது உரையாடலை கேட்டு என் கண்கள் கசிந்தன
“ என் ரட்சகனே! என் முன்னால் இருப்பவர் உன் ஹபீப்.
நான் உன்னுடைய அடிமை.
ஷைத்தான் உன்னுடைய விரோதி.
நீ என்னை மன்னித்தால் உன் ஹபீப் சந்தோஷப்படுவார்கள்.
உன் அடிமை வெற்றி பெறுவான்.
உன்னுடைய விரோதி வருத்தமடைவான்.
நீ என்னை மன்னிக்காவிட்டால், உன்னுடைய ஹபீப் வருந்துவார்.
உன்னுடைய அடியான் அழிந்து விடுவான்.
உன்னுடைய விரோதி திருப்தி அடைவான்.
உன் ஹபீப் வருந்துவதையும் உன்னுடைய அடியான் அழிந்துப் போவதையும் உன்னுடைய விரோதி மகிழ்வதையும் விரும்பாத கருணையாளன்நீ.
யா அல்லாஹ்! சிறப்புமிகு அரபியர்கள் அவர்களுடைய தலைவர்கள் மரணித்து விட்டால் தங்களுடைய அடிமைகளை அந்த தலைவருடைய மண்ணறைக்கு முன்னால் விடுவித்து விடுவார்களாம்
இதோ என் முன்னால் அகிலம் அனைத்திற்குமான தலைவர் இருக்கிறார்கள்
அவர்களுடைய மண்ணறைக்கு முன்னால் உன்னுடைய அடிமையான என்னை நரகத்திலிருந்து விடுவிப்பாயாக!”.
இணையத்திலிருந்து
-கணியூர்நாஜி-
Post a Comment