Header Ads



இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் நோய்



சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சி தொகையை  அழிப்பதற்கு இலங்கை சுங்கம் இன்று -28- நடவடிக்கை எடுத்திருந்தது.


பன்றி இறைச்சி, சொசேஜஸ் மற்றும் வாத்து இறைச்சி என்பன கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதியின்றி சீனாவில் இருந்து இந்த மாதத்தின் முதல் வாரத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.


இதில் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் என்ற நோய் நிலைமை இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


எனினும், இறக்குமதி செய்யப்பட்ட குறித்த இறைச்சி தொகை, சந்தைக்கு விடுவிக்கப்படவில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமாலி கொதலாவல தெரிவித்துள்ளார். 

1 comment:

  1. பன்றி இறைச்சி, சொசேஜஸ் மற்றும் வாத்து இறைச்சி போன்றவற்றை ஒரு போதும் இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கக் கூடாது. இலங்கை மக்கள் அசுத்தமானவற்றை ஒரு போதும் சாப்பிட்டுப் பழக்கமில்லை. பன்றியை இறைச்சியாக சாப்பிடும் இலங்கையர்கள் 1% வீதம் கூட இல்லை. அசாதாரணமாக அசுத்தத்தை உண்பவர்கள் 1% த்தினருக்காக பன்றி இறைச்சி, சொசேஜஸ் மற்றும் வாத்து இறைச்சி போன்றவற்றை வௌிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய அரசாங்கம் ஒருபோதும் அனுமதி வழங்கக்கூடாது. இது பற்றி பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு அந்த அசுத்தங்கள் இலங்கைக்கு உள்நுழையாது தடுக்க உரிய சட்டஙகள் உடனடியாக நிறைவேற்ற அரசாங்கம் மிக விரைவாகச் செயற்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.