பெண் செயற்பாட்டாளர் ஜுவைரியாவுக்கு உயர் விருது
போலந்தில் ஜஸ்டினா வைட்ரிஸ்கா மற்றும் இலங்கையின் ஜுவைரியா மொஹிதீன் ஆகிய இருவருமே 2023 இல் இவ்விருதுக்கு தெரிவாகியுள்ளனர்.
எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த ஜுவைரியா மொஹிதீன் 1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது தனது வீட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு, புத்தளத்திற்கு இடம்பெயர்ந்தார்.
பல சவால்கள் இருந்தபோதிலும், ஜுவைரியா ஒரு ஆர்வலராக விளங்கினார். முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தை நிறுவியதுடன் பெண்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட தனிநபர்களின் உரிமைகளுக்காக வாதிடும் பெண்கள் செயல் வலையமைப்பில் இணைந்து செயற்பட்டார்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, ஜுவைரியா பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக உறுதியாக குரல் கொடுத்து வருகிறார். முஸ்லிம் திருமணச் சட்டத்தில் உள்ள பாரபட்சமான நடைமுறைகளை நிவர்த்தி செய்வதற்கும் பாடுபட்டு வருகிறார். அவரது முயற்சிகள் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதுடன் சமூக மாற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் அமெரிக்க கிளை குறிப்பிட்டுள்ளது. – Vidivelli
Post a Comment