Header Ads



வீரமரணமடைந்த காசா எழுத்தாளரின் போராட்டம்


காசா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் ஆங்கில பேராசிரியரும், எழுத்தாளரும், அறிவுஜீவியுமான ரிஃபாத் அல் அரீர், முரட்டு இஸ்ரேல் தேசத்தால் நேற்று வெள்ளிக்கிழமை 7 ஆம் திகதி கொல்லப்பட்டார்.


ஒரு வாரத்திற்கு முன்பு இஸ்ரேல் வடக்கு காசாவில் இருந்து வெளியேறுவதற்கான எச்சரிக்கையை ஏற்கமாட்டேன் என்று தெளிவுபடுத்தி, தன் சொந்த நாட்டில் வாழும் உரிமைக்காக குரல் எழுப்பிய ரிஃபாத்தை சியோனிஸ்டுகள் கொன்றனர்.


ரிஃபாத் நவம்பர் 1 அன்று X ல் எழுதினார்,


"நான் சாக வேண்டும் என்றால், நீ என் கதையை சொல்ல வாழ வேண்டும்,


நான் சாக வேண்டும் என்றால், அது நம்பிக்கையை கொண்டு வரட்டும், அது ஒரு கதை ஆகட்டும்"...


சமீப நாட்களில் இஸ்ரேலிய பயங்கரவாதப் படைகள் குண்டுவெடிப்பை தீவிரப்படுத்திய போது, மரணத்திற்கு ஆயத்தம் செய்வது போன்ற வார்த்தைகள் ரிஃபாட்டில் இருந்து வந்தது. அவர் இதை X-ல் டிசம்பர் 4-ல் எழுதினார்:


"நான் சுதந்திர போராட்ட வீரராக இருந்திருக்க விரும்புகிறேன், எனவே என் அக்கம் பக்கத்திலும் நகரத்திலும் படையெடுக்கும் இஸ்ரேலிய இனவெறி வெறியர்கள் மீது படையெடுப்பவர்களை எதிர்த்து போராடி நான் இறக்கிறேன்".


இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலைக்கு பைடனும், ஜனநாயகக் கட்சியும் காரணம் என்பதை ரிஃபாத் கடந்த ட்வீட்டில் நினைவூட்டினார்.


இளைஞர்களுக்கு உற்சாகத்தை கொடுத்த செயல்வீரர் ரிஃபாத் அல் அரீர். உலகை அவர்களின் சொந்த மொழியிலேயே அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்ள தூண்டினார்.


காசாவில் இளம் எழுத்தாளர்களின் கதைகளை தொகுத்து காசா rites Back என்ற பெயரில் நூலை வெளியிட்டுள்ளார். லைலா அல் ஹத்தாத் எழுதிய மற்றொரு புத்தகம் காசா அமைதியாகிவிட்டது.


பாலஸ்தீனிய அமெரிக்க எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் ரம்ஸி பரௌட் கூறியது போல, 


ரிஃபாத்தின் மரணம் கதையின் முடிவல்ல, ஆனால் அறிவுசார் எதிர்ப்பு ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம்.

பி. கே. நியாஸ்

No comments

Powered by Blogger.