Header Ads



இலங்கையில் விவாக பதிவு செய்த தம்பதி, வெளிநாட்டில் விவாகரத்து பெற்றால் அது இந்நாட்டிலும் செல்லுபடியாகும்


(ஏ.ஆர்.ஏ.ப­ரீல்)


இலங்­கையில் விவா­கப்­ப­திவு செய்து கொண்­டுள்ள வெளி­நா­டு­களில் வாழும் இலங்கைத் தம்­ப­திகள் தாம் வாழும் நாட்டில் விவா­க­ரத்­துக்கு விண்­ணப்­பித்து விவா­க­ரத்து பெற்றுக் கொண்டால் அவ்­வி­வா­க­ரத்து இலங்­கையின் சட்­டப்­படி செல்­லு­ப­டி­யாகும் என மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் தீர்ப்பு வழங்­கி­யுள்­ள­து.


இந்த வகையில் வெளி­நாட்டு நீதி­மன்றம் ஒன்றில் விவா­க­ரத்து பெறும் தம்­ப­திகள் இலங்­கை­யி­லுள்ள மாட்ட நீதி­மன்­றுக்கு திரும்பி வந்து விவா­க­ரத்­துக்­கான நீதி­மன்றின் ஒப்­பு­தலை பெற வேண்­டு­மெ­னவும் தீர்ப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­து.


இங்­கி­லாந்தில் வாழும் இலங்­கையர் ஒருவர் அந்­நாட்டின் நீதி­மன்­றத்­தினால் பெறப்­பட்ட தனது விவா­க­ரத்தை ஏற்றுக் கொள்­ளு­மாறு பதி­வாளர் நாய­கத்­திற்கு உத்­த­ர­வி­டு­மாறு கோரி தாக்கல் செய்த மனுவின் மீதான விசா­ர­ணையின் பின்பே மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் இந்த தீர்பை வழங்­கி­யுள்­ள­து.


மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற நீதி­பதி­க­ளான சோபித ராஜ­க­ருணா மற்றும் தம்­மிக்க கணே­பொல ஆகியோர் இத்­தீர்ப்­பினை வழங்­கி­யுள்­ள­னர்.


இதே­வேளை மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் வழங்­கி­யுள்ள இத்­தீர்ப்பு முஸலிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தின் கீழ் பதிவு செய்­யப்­பட்ட முஸ்லிம் விவாக பதி­வு­க­ளுக்கும் செல்­லு­ப­டி­யா­குமா என காதி­நீ­தி­ப­திகள் போரத்தை தொடர்பு கொண்டு வின­விய போது, இது தொடர்பில் காதிகள் சபை சட்ட மாஅ­திபர் திணைக்­க­ளத்தை தொடர்பு கொண்டு தெளி­வுகள் பெற்றுக் கொள்ள வேண்­டு­மெ­னவும் சட்டமா அதி­பரே தீர்­மா­னிக்க வேண்­டு­மெ­னவும் காதி நீதி­ப­திகள் போரத்தின் உப­த­லைவர் இப்ஹாம் யெஹ்யா தெரி­வித்­தார்.


காதி­நீ­தி­ப­திகள் சட்டமா அதி­பரின் தீர்­மா­னத்தை எதிர்­பார்த்­தி­ருப்­ப­தா­கவும் அவர் கூறி­னார்.- VIdivelli

No comments

Powered by Blogger.