பன்றிகளுக்கு கொடுக்கப்படும் கோழிக் குஞ்சுகள்
தேசிய கால்நடை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான கோழிப்பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் கோழி குஞ்சுகள் எந்தவிதமான தேவைகளுக்கும் பயன்படுத்தப்படாமல் பன்றிகளுக்கு உணவளிக்க பயன்படுத்தப்படுவதாக அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
எனவே தற்போது வேலையில்லாதவர்களுக்கு இந்த கால்நடைகளை இலவசமாக வழங்கி அவர்களின் நாளாந்த வருமானத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கினார்.
அதன்படி, இறைச்சிக்காக கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்தக் குஞ்சுகளை விநியோகிக்க தேசிய கால்நடை மேம்பாட்டு சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை, தேசிய ஹதபிமா அதிகாரசபையானது முட்டை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இலவச பெண் கோழி குஞ்சுகளை வழங்கும் திட்டத்தையும் ஆரம்பித்துள்ளது.
முட்டை தொழிலில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சுமார் 20,000 கோழிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு 10 அல்லது 20 பெண் குஞ்சுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இத்திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் கோழிகளின் முட்டைகள் சந்தைக்கு வருவதால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் கூடுதல் வருமானம் ஈட்டும் வாய்ப்பு உள்ளது.
Post a Comment