Header Ads



லெபனான் தொழிலதிபருக்கு பேரதிர்ச்சி


ஓமன் விமானத்தில் வணிக வகுப்பில் பயணித்த லெபனான் பிரஜையின் கைப்பையில் இருந்து 14,000 அமெரிக்க டொலர் திருடப்பட்டுள்ளது.


இது தொடர்பில் சீனப் பிரஜை ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


47 வயதான லெபனான் நாட்டு வர்த்தகர் ஒருவர் ஓமன் எயார்லைன்ஸின் WY-371 விமானத்தில் தனது தாயாருக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக நேற்று 07.20 மணியளவில் ஓமானின் மஸ்கட்டில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தார்.


இந்த விமானத்தின் வணிக வகுப்பு இருக்கைகளில் இந்த தொழிலதிபரும் அவரது தாயும் வந்திருந்தனர், அவர்களுடன் சீன நாட்டவர் உட்பட மேலும் மூவரும் வந்துள்ளனர்.


லெபனான் நாட்டு தொழிலதிபரின் கைப்பை விமானத்தில் பயணிகள் இருக்கைக்கு மேலே உள்ள பொதிகள் வைக்கும் பெட்டியில் வைக்கப்பட்டது. விமானம் இரவில் பயணித்ததால், விமானத்தின் உள்ளே விளக்குகள் அணைக்கப்பட்டு, பயணிகளுக்கு ஆரோக்கியமான தூக்கத்திற்கு தேவையான பின்னணி தயார் செய்யப்பட்டிருந்தது.


இந்த நிலையில் விமானத்தின் வணிக வகுப்பில் இருந்த சீனர், லெபனான் நாட்டு தொழிலதிபரின் கைப்பையை திறந்து பணப்பையில் இருந்த 14,000 அமெரிக்க டொலர்களை திருடியுள்ளார். அதற்கு பதிலாக 18 எகிப்து நாட்டு நாணயத்தாளை பணப்பை வைத்து சென்றுள்ளார்.


இதுபற்றி எதுவும் தெரியாத லெபனான் நாட்டு தொழிலதிபர், விமானத்தில் இருந்து இறங்கி கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள வங்கிகளுக்கு சென்று தனது அமெரிக்க பணத்தை இலங்கை ரூபாய்க்கு மாற்ற முயற்சித்த போதே இதனை கண்டுபிடித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

No comments

Powered by Blogger.