பிரவுனின் மந்திரி ஹாமனும் அல்குர்ஆனில் கிடைக்கப்பெற்ற தகவலும்
- ஹாமன்
பிரவுனின் மந்திரி ஹாமனின் பெயரை தவ்ராத் வேதத்திலோ இஞ்சில் வேதத்திலோ இறைவன் குறிப்பிடவில்லை. ஆனாலும் அல் குரான் ஹாமனை 4 இடங்களில் குறிப்பிடுகின்றது. ஓரிடத்தில் அவனை மந்திரியாக விளித்துப்பேசுகின்றது. அல் குரானை ஆராய்ந்த பிரான்சிய விஞ்ஞானி Maurice Bucaille(1920 –1998), திருமறையானது தெய்வீகவெளிப்பாடு என்பதை நிருவினார்.இவர்தான் பிர் அவுனின் உடலை 1981 இல் விஞ்ஞான ரீதியாக ஆய்விற்குற்படுத்தியவர். Maurice Bucaille திருமறையை ஆய்வு செய்தபின் இஸ்லாத்தை தழுவினார். அவருக்கு ஹாமனின் பெயர் தவ்ராத், இஞ்சீல் வேதநூல்களில் குறிப்பிடப்படாமை பற்றி அறியும் ஆவலைத்தூண்டியது.
Maurice Bucaille,புராதன எகிப்திய வரலாறு பற்றி நங்கறிந்த பிரான்சிய அறிஞர் ஒருவரிடம் விரைந்தார். அவரிடம் ஹாமன் எனும் பெயரைக்காட்டி எகிப்திய புராதன ஏடுகளில் இப்பெயரிற்கு என்ன அர்த்தம் கூறப்படுகின்றது எனக்கேட்டார். அவ்வறிஞர் பிர் அவுனின் ஆட்சியில் இருந்த மக்களின் பெயர்கள் அடங்கிய அகராதியை கொண்டுவந்தார். அதனை திறந்து பார்த்தபோது மொரிஸ் புகைல் மிகவும் ஆச்சரியம் அடைந்தார்.
அவ்வகராதியில் ‘ஹாமன்’ என்பதன் பொருள் செங்கற்சூளையின் மேற்பார்வையாளர் என்றிருந்தது. மொரிஸ் புகைல் அந்த அறிஞரை பார்த்து;
“1,400 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான ஒரு நூலில் ஹாமன் என்பவன் பிரவுனின் மந்திரி என்றும் அவன் கட்டிடக்கலைஞன் என்றும் கட்டிடக்கலைஞர்களின் தலைவன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது எனக்கூறினால் அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்?” எனக்கேட்டார்.
இதனைக்கேட்டுக்கொண்டிருந்த அங்கிருந்த இன்னொரு அறிஞர் எழுந்து;
“நீங்கள் கூறுவது சாத்தியமில்லை, இப்பெயர் புராதன எகிப்தில் செதுக்கப்பட்ட கல் ஏடு ஒன்றிலும்,எகிப்தின் புராதன ஏடுகளிலுமே காணப்படுகின்றது.அக்கல் ஏடுகளில் ஒன்று ஆஸ்த்திரியாவின் தலைநகர் வியன்னாவிலுள்ள “ஹோப்” புராதன நூதனசாலையில் உள்ளது. மேலும் ஹாமான் என்பதன் பொருளை புராதன மொழியை அறிந்த ஒருவரினால் மட்டுமே கூறவும் முடியும்” எனக்கூறினார்.
இதனைக்கேட்ட மொரிஸ் புகைல் திருமறையின் மொழிபெயர்ப்பை திறந்துகாட்டி அவரைப்பார்த்து;
“வாசியுங்கள்.இது முஹம்மத்(ஸல்) அவர்கள் தந்த அல்குரான் எனும் அற்புதமாகும்” என்றார்.
இன்னும் பிர்அவ்ன் சொன்னான்: “பிரமுகர்களே! என்னைத்தவிர உங்களுக்கு வேறெரு நாயன் இருக்கின்றான் என்பதாக நான் அறியவில்லை. ஆதலின், ஹாமானே! களிமண் மீது எனக்காகத் தீயைமூட்டி (செங்கற்கள் செய்து) பிறகு எனக்காக ஓர் (உயரமான) மாளிகையைக் கட்டுவாயாக! (அதன் மேல் ஏறி) நான் மூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும் - மேலும் நிச்சயமாக நான் இவரை பொய்யர்களில் நின்றுமுள்ளவர்” என்றே கருதுகின்றேன்.
(அல்குர்ஆன் : 28:38 )
மொரிஸ் புகைலின் மிகவும் பிரபலமான கூற்று;
“அல்குர்ஆன் ஆனது அரேபியர்களின் அறிவியல் விஞ்ஞான நிலைக்கும், உலகின் அறிவியல் விஞ்ஞான நிலைக்கும், பிற்கால அறிஞர்களின் அறிவியல் விஞ்ஞான நிலைக்கும்,20ம் நூற்றாண்டின் அதிஉயர் விஞ்ஞான அறிவியல் நிலைக்கும் மேலாகவே உள்ளது. ஆதலால் அல்குரானானது ஒரு படிப்பறிவில்லாத நபரிடமிருந்து வந்திருக்க முடியாது, ஆகவே இது முஹம்மத்(ஸல்) அவர்களின் நபித்துவத்தை உறுதிப்படுத்துகின்றது. அவர் ஒரு தீர்க்கதரிசியும் கூட.”
AKBAR RAFEEK
Post a Comment