நீங்கள் இதனை படிக்கும் போது..
இப்போது நீங்கள் உங்கள் அறையில், ஒரு சொட்டும் ஆடாமல் அசையாமல் அமர்ந்த வண்ணம் இந்த வினாடிகளில் பேஸ்புக்கில் இந்தப் பதிவை படிக்கும் போது ஒரு நொடிக்கு அரை கிலோமீட்டர் வேகத்தில் சுற்றித் திரிகிறீர்கள். காரணம், பூமிக் கிரகம்தான் உங்கள் இருப்பிடம் என்பதால் பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்ள ஒரு நொடியில் எடுக்கும் வேகம் இதுதான் என்பதாகும்.
அத்தோடு சேர்த்து நீங்கள் சுற்றும் வேகம் வினாடிக்கு 300 கிலோமீட்டராக மேலும் அதிகரிக்கிறது. அதற்குக் கரணம் நம் பூமி சூரியனை ஒரு வினாடிக்கு சுற்றும் வேகம் இது என்பதாகும்.
இதுவெல்லாம் நீங்கள் உங்கள் கட்டிலில் ஆடாமல் அசையாமல் இருக்கும் போது ஒவ்வொரு விநாடிகளிலும் நடந்து கொண்டிருக்கும் ஆட்டங்கள், அசைவுகளாகும்.
இது மட்டுமல்லாமல் நீங்கள் நகரும் வேகம் விநாடிக்கு 2,300,000 கிலோமீட்டர் வேகத்தில் இன்னும் அதிகரிக்கிறது. ஏனெனில் நமது சூரிய குடும்பம் நம்மை சுமந்து கொண்டு அதன் கோல்மண்டல சுற்றுப்பாதையை சுற்றும் வேகம் இதுவாகும்.
சுற்றுப் பயணம் முடியவில்லை! அத்தோடு நமது கோல் மண்டலம் நம்மை சுமந்து கொண்டு பால்வெளியில் மணித்தியாலத்திற்கு 2300000 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிது.
சுருக்கமாக சொன்னால் நாமெலலாம் நமக்குத் தெரியாமலே பால்வெளி சுற்றும் வாளிபர்கள் எனலாம்.
இதைத்தான் அண்டங்களின் அரசன், அகிலங்களின் ஆண்டவன் இப்படிச் சொல்லிக் காட்டுகிறான்:
((( ஒவ்வொன்றும் ஆகாயத்தில் நீந்திக் கொண்டிருக்கின்றன.))
📖 அல்குர்ஆன் : 36:40
✍ தமிழாககம் / imran farook
Post a Comment