Header Ads



பள்ளிவாசலுக்கு 80 இலட்சத்தை வழங்கிய தேசிக்காய் வியாபாரி - 3 கோடி ரூபா தருவதாக வாக்குறுதி


கல்முனை பொதுச் சந்தையில் தேசிக்காய் வியாபாரம் செய்யும்  இளம் தொழில் அதிபர் நண்பன் அல்ஹாஜ் அஸ்ரப் அவர்கள் தன்னுடைய ஹலாலான  உழைப்பில் மூலம் கிடைத்த 80 இலட்சம் ரூபாய் பணத்தினை  தனது மஹல்லாவில் உள்ள  மஸ்ஜிதுல் நூராணியா ஜும்ஆ பள்ளிவாசலின் கட்டுமான பணிக்கு அள்ளி வழங்கியதோடு  அத்துடன்  நின்றுவிடாமல் பள்ளிவாசலின் கட்டுமான பணிகள் பூரணத்துவம் அடையும் வரை தனது வியாபாரத்தால் கிடைக்கப்பெறும் இலாபத்தில் மூலம் இன்னும் 2 கோடியே 20 இலச்சம் (மொத்தமாக 3 கோடி ரூபாய்கள்) பணத்தினையும் வழங்கி பள்வாசலின் முழுக் கட்டுமான பணியையும் பூர்த்தி செய்வதாக வாக்குறுதி வழங்கியுள்ளார்.


அல்ஹம்துலில்லாஹ் 


உலகம் அழியும் வரை அந்த பள்ளியில் தொழும், ஒவ்வொரு மனிதர்களின் நன்மைகளும், அவர்களின்  துஆவும் அவருக்கு ஜன்னத்தில் பிரமாண்டமான மாளிகையை கட்டும் என்பதில்  சந்தேகம் இல்லை.


مَثَلُ الَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ كَمَثَلِ حَبَّةٍ اَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِىْ كُلِّ سُنْبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ‌ وَاللّٰهُ يُضٰعِفُ لِمَنْ يَّشَآءُ‌  وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ‏

அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உதாரணமானது,  ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றதாகும். அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான், இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன், யாவற்றையும் நன்கறிபவன்.

(அல்குர்ஆன் : 2:261)

யார் அல்லாஹ்விற்க்காக ஓர் பள்ளிவாசலை கட்டுகின்றாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தில் அது போன்ற ஒன்றை கட்டுகின்றான்.(நூல் :- முஸ்லிம்-533)


யா அல்லாஹ் நண்பன் அஸ்ரப் உடைய தொழிலில் உண்ணுடைய பரக்கத்தை அள்ளிச் சொரிவாயாக!


யா அல்லாஹ் நண்பன் அஸ்ரப் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் தேக ஆரோக்கியத்தையும் வழங்குவாயாக!


 யா அல்லாஹ் நண்பன் அஸ்ரப் உடைய உள்ளத்தை போன்று வசதி படைத்தவர்களுடைய உள்ளத்தை விரிவாக்கி வைப்பாயாக!


- Team Kiluhiluppu Media Unit -

No comments

Powered by Blogger.