Header Ads



கழுத்தை அமுக்காமல், பூவை நசுக்காமல் பணம் எடுக்க வேண்டுமென்கிறார் அமைச்சர்


சிறி லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை வாங்க ஏழு முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளதாக தமக்கு தெரியவந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று(09) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


அந்த முதலீட்டாளர்களை அழைக்கும் பணி திறைசேரியால் செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் செலவுத் தலைப்பு மீதான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.


விமான ஓட்டி பதவிகளுக்கு இருநூறு பேர் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


முதலீட்டாளர்கள் வருவதால் கழுத்தை அமுக்கி பணம் எடுக்க முடியாது என்றும், பூவை நசுக்காமல் பணம் எடுக்கும் வகையில் வழிநடத்த வேண்டும் என்றார்.


காலி துறைமுகம், திருகோணமலை துறைமுகத்தை இலாபகரமான நிலைக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அரசாங்க கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.