Header Ads



4 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆபாச படம் பார்த்தார்களா..? ஆசிரியரின் முறைப்பாட்டை ஏற்க மறுத்த பெற்றோர்


குருநாகல் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் நான்காம் தர மாணவர்கள் குழுவொன்று கையடக்கத் தொலைபேசியில் ஆபாசமான திரைப்படங்களைப் பார்ப்பதாக வகுப்பு ஆசிரியர் அவர்களது பெற்றோருக்கு அறிவித்துள்ளார்.


ஆனால் பெற்றோர் ஆசிரியரின் இந்த அறிவிப்பை ஏற்க மறுத்துவிட்டனர்.


மாணவர் ஒருவர், ஒன்லைன் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, ​​இந்த இணையதளத்தை அணுகி ஆபாச காட்சிகளை பார்த்தது தெரியவந்துள்ளது.


பின்னர், தனது நெருங்கிய நண்பர்களுக்கு உரிய முகவரியை அனுப்பிய பின், அவர்களும் இந்த தளத்தைப் பார்வையிடுவது வழக்கம்.


இது குறித்து வகுப்பு ஆசிரியர் தெரிந்து கொண்டு பெற்றோருக்கு தகவல் தெரிவித்த போதிலும் பெற்றோர்கள் ஆசிரியரின் இந்த முறைப்பாட்டை ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.   ibc

1 comment:

  1. நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது வீதம் ஆசிரியர் சொல்வது உண்மை

    ReplyDelete

Powered by Blogger.