Header Ads



புலிகளின் மகள் எனக்கூறப்பட்டு, 45 நிமிடங்களில் திரட்டப்பட்ட 1 இலட்சத்து 23ஆயிரத்து 500 சுவிஸ் பிராங்குகள்


புலிகளின் தலைவரது மகள் என்று ஒரு மாயை உருவாக்கப்பட்டு, அதன் மூலம் ஒரு நாளில் 45 நிமிடங்களில் மாத்திரம் 1 இலட்சத்து 23ஆயிரத்து 500 சுவிஸ் பிராங்குகள் சேகரிக்கப்பட்டுள்ளது என உலகத் தமிழர் அமைப்பின் பிரநிதி நிமலன் விஷ்வநாதன் தெரிவித்தார்.


லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


தொடர்ந்தும் தெரிவிக்கையில்,


2009ஆம் ஆண்டு எமது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தற்போது எங்களது தமிழ் மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கின்றது.


தமிழர்களின் போராாட்டத்தை மூன்று வகையாக பிரிக்கலாம், சாத்வீகப் போராட்டம், ஆயுதப் போராட்டம், சர்வதேச போராட்டம். இந்த மூன்று போராட்டங்களும் ஒரு சரித்திரம்.


ஆயுதப் போராட்டம் மௌனிப்பதற்கு முன்பு, எடுத்துக்கொண்டால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் சமமான இராணுவ பலம் இருந்தது.


2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் ஆங்காங்கு பணம் வசூலிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


அதேசமயம், மக்களாலும், நன்கொடையாளர்களாலும் தானமாக கொடுக்கப்பட்ட பணமானது பலரால் சுருட்டிக்கொள்ளப்பட்டது.


அதன் பின்னர் தற்போது, விடுதலைப் புலிகளின் தலைவரது மகள் என்று ஒரு மாயை உருவாக்கப்பட்டு, அதன் மூலம் ஒரு நாளில் 45 நிமிடங்களில் மாத்திரம் 1 இலட்சத்து 23ஆயிரத்து 500 சுவிஸ் பிராங்குகள் சேகரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.