Header Ads



ஜோர்தானில் உள்ள 350 இலங்கையர்களின் துயரம்



ஜோர்தானின் சஹப் பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றுக்கு தொழிலுக்கு சென்ற சுமார் 350 இலங்கையர்கள் ஒரு வருட காலமாக வேதனம் இன்றி பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.


இதன் காரணமாக தங்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


குறித்த தரப்பினர் சுமார் 6 வருடங்களாக அங்கு பணியாற்றி வந்துள்ளனர். எனினும் தற்போது குறித்த ஆடை தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது


இந்தநிலையில் உணவு மற்றும் தங்குமிட வசதியின்றி தாங்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. ஆறு வருடங்களாக ஜோர்டான் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய இலங்கைப் பெண்கள், தொழில்சாலை மூடப்பட்டதும் சம்பளமின்றி தவிர்க்கும் போது அது பற்றி வௌிநாட்டு தொழில் பணியகம் உடனடியாக அதுபற்றி உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களின் இடுக்கன்களை நீக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.