Header Ads



பதிவு செய்யப்படாதுள்ள 300 பள்ளிவாசல்கள்


(ஏ.ஆர்.ஏ.ப­ரீல்)


இது­வரை பதிவு செய்­யப்­ப­டா­துள்ள பள்­ளி­வா­சல்கள் உட்­பட அனைத்து மதங்­க­ளி­னதும் மத ஸ்த­லங்­களைப் பதிவு செய்­வ­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.


அதற்­கி­ணங்க அனைத்து மத ஸ்த­லங்­க­ளையும் பதிவு செய்து கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் கலா­சார அமைச்சும் முன்­னெடுத்­துள்­ள­ன.


மதஸ்­த­லங்­களின் பதி­வுகள் மற்றும் தர­வுகள் டிஜிட்டல் மய­மாக்கப்பட­வுள்­ளன. நாட்டில் சுமார் 300 பள்­ளி­வா­சல்கள் இது­வ­ரை பதிவு செய்­யப்­ப­டாது நிர்­வா­கங்­க­ளினால் பதிவு செய்­வ­தற்­கான எவ்­வித ஏற்­பா­டு­க­ளும் மேற்­கொள்­ளப்­ப­டா­ம­லி­ருக்­கின்­றன. இத்­த­கைய பள்­ளி­­வாசல் நிர்­வா­கங்கள் உட­ன­டி­யாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தைத் தொடர்பு கொண்டு அதற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு திணைக்­களப் பணிப்­பாளர் இஸட்.ஏ.எம்.பைஸல் வேண்­­டுகோள் விடுத்­துள்­ளார்.


மதஸ்­த­லங்கள் எனும் போது பள்­ளி­வா­சல்கள் மாத்­தி­ர­மல்ல தக்­கி­யாக்­கள் தரீக்­காக்கள் என்­ப­ன­வும் உள்­ள­டங்­கும்.இ­வை­களும் கட்­டா­ய­மாகப் பதிவு செய்து கொள்­ளப்­பட வேண்­டும்.


பள்­ளி­வா­சல்­களின் பதி­வுகள் டிஜிட்டல் மயப்­ப­டுத்­தப்­பட்டு தர­வு­களின் கட்­ட­மைப்­பொன்று உரு­வாக்­கப்­ப­டும்.


இம்­முறை எதிர்­வரும் ஜன­வரி மாதத்­தி­லி­ருந்து செய­லு­ருப்­பெ­றும்.

பதிவு செய்­யப்­ப­டா­துள்ள பள்­ளி­வா­சல்­கள்,­தக்­கி­யாக்­கள்,­ த­ரீக்­காக்கள் மாத்­தி­ர­மல்ல ஏனைய மதங்­களின் மதஸ்­த­லங்­களும் பதி­யப்­பட்டு டிஜிட்டல் மய­மாக்­கப்­ப­ட­வுள்­ளன என்றும் தெரி­வித்­தார்.


பதி­வு­க­ளுக்­காக ஏற்­க­னவே விண்­ணப்­பித்­துள்ள நுாற்­றுக்­க­ணக்­கான பள்­ளி­வா­சல்­களை பதிவு செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் துரி­தப்­ப­டுத்தப்பட்­டுள்­ளன என்றும் கூறி­னார். – Vidivelli

No comments

Powered by Blogger.