தாடி விவகாரம் - பேராசியர்களுக்கு எதிராக நீதிமன்றம் இன்று 2 வது தடை உத்தரவு
குறிப்பிட்ட மாணவர் சார்பாக சட்டத்தரணி சுரேன் ஜானராஜ் மற்றும் சட்டத்தரணிகள் றுடானி ஸாஹிர், றஷாட் அஹமட், மேர்வின் தயாளன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
ஏற்கனவே கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தாடி விவகாரத்தில் இன்னொரு மாணவர் வழக்குத் தொடர்ந்து இடைக்கால உத்தரவொன்று அமுலில் இருக்கும் வேளை மீண்டும் பிரதிவாதிகள் தாடி வைத்திருக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைத் தடுக்கின்றனர் என்ற விடயம் நீதியரசரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட இறுதியாண்டு மாணவரான ஸஹ்றியை பிரதிவாதிகள் தாடி வைத்திருந்த ஒரே காரணத்திற்காக வைத்தியசாலையில் நடைபெறும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுத்தும் விரிவுரைகளில் பங்கு பெறுவதைத் தடுத்தும் வந்திருந்தனர். எத்தனை முயற்சிகள் எடுத்தும் அவர்கள் பிடிவாதம் அவர்களை விடவில்லை. எந்தவித அடிப்படையும் இல்லாமல் அப்பட்டமான மனித உரிமை மீறலை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இப்பேராசிரியர்கள் மீறி உள்ளனர். முஸ்லிம்களின் கலாச்சார அடையாளமான தாடி வைப்பதைத் தடுப்பதில் முன் நிற்கின்றனர். வழக்கினை செவியுற்ற நீதிமன்றம் மனுவில் கோரிய இடைக்கால நிவாரணத்தினை உடனே வழங்கியது.
குறிப்பிட்ட நிவாரணத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களான மணிகண்டு திருக்குமார், பேராசிரியர் கருணாகரன் மற்றும் கிழக்குப் பல்கலைகழக நிர்வாகம் குறிப்பிட்ட மாணவரை வைத்தியசாலையில் நடைபெறும் Clinical Clarkshipல் பங்கு பற்றுவதில் இருந்தும், களவிஜயங்கள் செல்வதில் இருந்தும் ஏனைய பரீட்சைகளில் இருந்து தோற்றுவதில் இருந்து தடுக்கும் பல்கலைக்கழகத்தின் முயற்சிக்கு எதிராக தடைஉத்தரவினை வழங்கி உள்ளது.
இது ஒரு தேவையற்ற நேரத்தையும் பணத்தையும் வீணாக்கி முஸ்லிம் உம்மத்தின் அடிப்படைத் தேவைகளை புறந்தள்ளி தேவையற்ற விடயத்தில் நேரத்தையும் காலத்தையும் வீணாக்கும் செயல்முறை. உண்மையில் மருத்துவத் துறையில் அதுவும் பிள்ளைப் பேறு மருத்துவத் துறையில் பயிற்சி பெறும் மாணவர்கள், உரிய போதனாசிரியர்களின் உபதேசங்கள், கட்டளைகளை மீறுவது, மாணவனுக்கு உரிய அழகல்ல. அவர் தாடி வைப்பதும் தாடியைச் சிறைப்பதும் அவருடைய தனிப்பட்ட உரிமை. ஆனால் மருத்துவத் துறையில் ஈடுபட்ட மாணவர்களுக்கு தாடி வைக்கக்கூடாது என மேலுள்ள அதிகாரிகள் கட்டளையிட்டால் அதைப்பின்பற்றுவதனால் எந்த மனித உரிமைகளும் மீறப்படமாட்டாது. அந்த மாணவன் உரிய அதிகாரிகளின் கட்டளைகளை பின்பற்ற முடியாவிட்டால் அவருடைய மனித உரிமையைப் பேண போதனாசிரியர்களை அவமானப்படுத்துவது எந்தவகையிலும் அனுமதிக்க முடியாது. அது நிச்சியமாக மார்க்கமல்ல என்பதை முஸ்லிம் சமூகத்திலுள்ள கல்விமான்கள் தயவுசெய்து இந்த விடயத்தை விபரித்து அந்த மாணவருக்கும் ஏனையவர்களுக்கும் பகிரங்கமாக அறிவிப்பதும் ஒரு மார்க்கக் கடமையாகும்.
ReplyDeleteஇப்படிப்பட்டவர்கல்தானா வடகிழக்கு இணைந்து செயற்பட விரும்புவது
ReplyDelete