Header Ads



நாடெங்கிலும் அதிகாலை 2 மணிக்கும் 5 மணிக்கும் இடையில்தான் அதிக குற்றச்செயல்கள் நடக்கின்றன


- ரீ.எல்.ஜவ்பர்கான் -


அதிகமான கிழக்கு மாகாணத்தில் குடிபோதையில் வாகனம் செலுத்துவதை கட்டுப்படுத்த பொலிசார் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.


 டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி தொடக்கம் ஜனவரி 5  ஐந்தாம் தேதி வரையான காலப்பகுதியில்தான் மிக அதிகமான வாகன விபத்துக்கள் இடம் பெறுகின்றன.அதிகாலை இரண்டு மணி முதல் 5 மணி வரை காலப்பகுதியில் அதிகமான குற்றச் செயல்கள் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி போலீஸ் மாதிரி சட்டத்தரணி அஜித் ரோகன மட்டக்களப்பில் இடம்பெற்ற வைபவ மொன்றின் போது குறிப்பிட்டார்.


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பொலிஸ் நிலையங்களுக்கும் 75 இலட்சம் ரூபாய் செலவில் அத்தியாவசிய பாவனைப் பொருட்களை கையளிக்கும் வைபவம் நேற்று மாலை மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாச்சகர் அமல் ஏ எதிரிமான தலைமையில் நடைபெற்ற போது அந்நிகழ்வில் பிரதம அதிதி யாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது இவ்வாறு தெரிவித்தார்.


மட்டக்களப்பு பிரதி பொலிஸ் மா அதிபர் உதித் லியனகே உட்பட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், உயர் பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.