Header Ads



இலங்கையில் 1727 மில்லியன் டொலர்களை முதலிடும் அவுஸ்திரேலியா


விலைமனு நடைமுறையின்றி கிளிநொச்சி - பூநகரி குளத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் இன்று -12- தெரிவித்தார்.


1727 மில்லியன் டொலர் முதலீட்டில் அவுஸ்திரேலியாவின்  United Solar Group என்ற நிறுவனம் பூநகரி குளத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி   முதலீட்டுத் திட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக மின்சக்தி  எரிசக்தி அமைச்சர் கஞ்சன  விஜேசேகர நேற்று (11) தெரிவித்திருந்தார். 


700 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையத்தில் 1500 மெகாவாட் மணித்தியால கொள்ளளவுடைய மின்கலக் கட்டமைப்பும் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார். 


இந்த திட்டத்தில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியிருந்தது. 

No comments

Powered by Blogger.