நாட்டிற்கு வரவுள்ள 15 மில்லியன் முட்டைகள்
இறக்குமதி செய்யப்பட்ட 15 மில்லியன் முட்டைகள் நாளை இரவு நாட்டை வந்தடையும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனவரி மாதம் முழுவதும் நாளாந்தம் 10 இலட்சம் முட்டைகள் சந்தைக்கு விநியோகிக்கப்படும்.
முட்டைக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையில் அரசாங்கத்திடம் இருந்து முட்டை இறக்குமதிக்காக அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு முட்டை என்ற பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து 'மூட்டைகளும்" தொழில்சாலையில் இரசாயனக்கலவை மூலம் செயற்கையாக தயாரித்த இரசாயனக்கலவை. அதனால் புற்றுநோய்களும் பலவிதமான வயிற்றுப்புண்களும் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என துறைசார்ந்தவர்கள் கருத்துத் தெரிவித்து அவற்றைத் தவிர்ந்துகொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். இம்முறையயும் மில்லியன் கணக்கில் இறக்குமதி செய்யப் போவது நிச்சியம் கோழி முட்டையாக இருக்கவே முடியாது. எனவே அவற்றை சரியாக பரிசோதனை செய்து வாங்குமாறு பொதுமக்களை வேண்டிக் கொள்கின்றோம்.
ReplyDelete