லசித் மலிங்காவின், புதிய யோர்க்கர்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் லசித் மலிங்காவின் புதிய யோர்க்கர் பந்து தொடர்பில்தான் தற்போது உலக அளவில் பேசப்பட்டு வருகிறது.
லசித் மலிங்கா புதிதாக இலங்கை இசைத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
14 பாடல்கள் அடங்கிய தனது புதிய இசை ஆல்பத்தை வெளியிட அனைத்தும் தயாராக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்களுக்கு மலிங்க தெரிவித்துள்ளார்.
இந்த 14 பாடல்களை லசித் மலிங்கவே எழுதியிருப்பது சிறப்பம்சமாகும்.
மலிங்கவின் அற்புதமான யோர்க்கர் பந்து போல அவர் எழுதிய இந்தப் பாடல்களும் கேட்போரின் கவனத்தை ஈர்க்கும் என்பது மலிங்கவின் நம்பிக்கையாக உள்ளதாம்.
இதேவேளை, பாடல் எழுதுவதா அல்லது கிரிக்கெட் விளையாடுவதா இதில் எது கடினமானது என வெளிநாட்டு ஊடகம் லசித் மாலிங்கவிடம் கேட்டது.
அதற்கு பதிலளித்த லசித் மலிங்க, கிரிக்கெட் விளையாடுவதே மிகவும் கடினமானது என்று கூறியுள்ளார்.
கிரிக்கெட் விளையாடிய எவருக்கும் அதன் சிரமம் நன்கு தெரியும் எனவும் லசித் மலிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment