Header Ads



சுனாமியில் உயிரிழந்த 137 பேரின் உடல் பாகங்கள் இன்னும் உள்ளன


சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த இனந்தெரியாத 137 பேரின் உடல் பாகங்கள் காலி, கராபிட்டியவில் உள்ள மருத்துவ பீடத்தின் தடயவியல் மருத்துவப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


குறித்த நபர்களின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை, அதே நேரத்தில் இந்த உடல்களில் இருந்து எலும்பு துண்டுகள் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படும் என சட்ட வைத்திய அதிகாரி (JMO), பேராசிரியர் யு.சி.பி பெரேரா தெரிவித்தார் .


சுனாமி அனர்த்தத்தின் பின்னர் ஒன்பது மாதங்களில் தெல்வத்தை மற்றும் பெரலிய பகுதிகளில் சதுப்பு நிலங்களில் உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டதாக பேராசிரியர் பெரேரா தெரிவித்தார்.


சுனாமி அனர்த்தத்தின் பின்னர், இறந்தவர்களின் உறவினர்களால் அடையாளம் காண்பதற்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சடலங்கள் வைக்கப்பட்டதாக கூறிய அவர், எவ்வாறாயினும், உடல் உறுப்புகளின் அடையாளத்தை எவராலும் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அவர் கூறினார். 

No comments

Powered by Blogger.