Header Ads



100 இலட்சம் வாக்குகளைப் பெற்று, மீண்டும் ஜனாதிபதி ஆசனத்தில் அமரவுள்ள ரணில்


அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க, வரலாற்றில் வேறு எந்த ஜனாதிபதியும் பெற்றுக்கொள்ளாத வாக்குகளைவிட நூறு இலட்சம் வாக்குகளைப் பெற்று மீண்டும் ஜனாதிபதி ஆசனத்தில் அமருவார். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதனை நான் நகைச்சுவைக்காகத் தெரிவிக்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியல்வாதி என்பதற்கு அப்பால் அவர் ஒரு பொருளாதார நிபுணர். அதனால் அடுத்த வருடம் ஏப்ரல் மாதமாகும்போது பொருளாதார ரீதியில் நாட்டை எந்த இடத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்ற தெளிவான இலக்கை நோக்கியே தற்போது அவர் பயணிக்கின்றார்.


அதனால் ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது. வங்குராேத்து நிலையில் இருந்த நாட்டைக் குறுகிய காலத்தில் அதில் இருந்து மீட்பதற்கு ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.


அத்துடன் தற்போது நாடாளுமன்றத்தில் இருக்கும் எதிர்க்கட்சியும் எங்களுடையது. அதேநேரம் ஜனநாயக முறையில் செயற்படுவதற்கு மக்களால் தெரிவு செய்யப்படும் எதிர்க்கட்சியையும் நாங்கள் பாதுகாக்க வேண்டும்.


ஜனாதிபதி வேட்பாளர்கள் எனத் தற்போது பலரும் அறிவித்து வந்தாலும் இறுதி நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு இடத்துக்கு வரும் என குறிப்பிட்டார். 

1 comment:

  1. வஜிர அபேவர்த்தன என்ற கலர் நிற பூச்சு மாஸ்டர் மட்டும் தான் சனாதிபதிக்கு வகைவகையான நிறம் பூசி அழகு பார்ப்பவர். இந்த நபரைச் சோதிக்க அங்கொட வைத்தியசாலையில் போதிய வசதி இல்லை எனவும் அவரைப் பரிசோதனை செய்ய சிங்கப்பூருக்கு அனுப்பிவைக்க வேண்டும் எனவும் மருத்துவ ஆலோசனை கூறப்பட்டதாம். ஆனால் சிங்கப்பூர் வைத்தியசாலைகள் அந்த கோரிக்கையை சிங்கப்பூர் விசேட டாக்டர்களும் மானசீக ரீதியாக பாதிப்படையும் வாய்ப்புகள் அதிகம் இலங்கையின் அரசியல் மென்டல் கேஸ்களை பரிசோதனை செய்யும் விசேட கருவிகள் இன்னமும் மருத்துவத்துறையில் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் கூறி அதனை முழுமையாக நிராகரித்ததாம்.

    ReplyDelete

Powered by Blogger.