1000 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது
மியன்மாரில் இருந்து இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் நேற்று (22) மாலை தமிழகத்தில் சிக்கியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட இரண்டு கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
56 கிலோகிராம் எடையுள்ள குறித்த போதைப்பொருள், மியன்மாரில் இருந்து கடல் வழியாக இந்தியாவின் மணிப்பூருக்குக் கடத்தி வரப்பட்டு அங்கிருந்து தமிழ்நாடு - சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு சென்னையின் ஊடாகக் கடல் கரைக் கிராமத்தின் ஊடாக இலங்கைக்குக் கடத்த திட்டமிடப்பட்டிருந்தபோதே கைப்பற்றப்பட்டுள்ளது
இலங்கைக்கு தொடர்ந்து வந்து குவியும் போதைப் பொருட்களைப் பார்க்கும் போது இந்த நாட்டில் இரண்டரைக் கோடி மக்களுக்கும் அத்தியவாசிய உணவுப் பொருட்கள் அவசியமில்லை. அந்த போதைப் பொருட்களால் வாழ்க்கையை கொண்டு செல்ல முடியும் போல் தெரிகிறது. ஒவ்வொரு நாளும் இலங்கை்கு வந்து குவியும்இந்த மிகப் பெரிய தொகை போதைப் பொருட்களை யார் கொண்டுவருகின்றார்கள் அதன்பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது ஒருபோதும் விசாரணையோ, அது பற்றிய கேள்வி கணக்கு இல்லை. இந்த நாட்டில் விசாரிக்கும் முறை மக்கள்மத்தியில் மிகப் பெரிய சந்தேகத்தைத் தோற்றுவிக்கின்றது.
ReplyDelete