Header Ads



முதல் 10 இடங்களில், முஸ்லிம் மாணவர்கள் எவரும் இல்லை


கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியான நிலையில் முதல் பத்து இடங்களை பிடித்த மாணவர்களின் விபரம் வெளியாகியுள்ளன.


இந்த பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 72.07 வீதமான மாணவர்கள் உயர்தரத்திற்கு தெரிவாகியுள்ளதுடன்,13588 மாணவர்கள் 9 A பெறுபேற்றையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில்,


கண்டி மகாமாயா பாலிகா வித்தியாலய மாணவி சமாதி அனுராதா முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.


இரண்டாம் இடத்தை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியின் அக்ஷ்யா ஆனந்த சயனன் பெற்றுள்ளார்.


மூன்றாம் இடத்தை கொழும்பு ரோயல் கல்லூரியின் ஏ.எம்.ஏ. மின்சந்து அலககோன்,பெற்றுள்ளார்.


நான்காவது இடத்தை கொழும்பு ரோயல் கல்லூரியின் துல்மினா சதீபா திஸாநாயக்க மற்றும் கம்பஹா சிறி குருசா பெண்கள் கல்லூரி மாவணர்கள் பெற்றுள்ளனர்.


ஆறாம் இடத்தை காலி சங்கமித்தா மகளிர் கல்லூரி, குருநாகல் மலியதேவ ஆண்கள் கல்லூரி, திருகோணமலை ஸ்ரீ சண்முகம் பெண்கள் கல்லூரி ஆகிய மாணவர்கள் பெற்றுள்ளனர்.


பத்தாம் இடத்தை கொழும்பு மியூசியஸ் கல்லூரி மற்றும் பெண்களுக்கான கண்டி உயர்தரப் பாடசாலை ஆகியன பிடித்துள்ளன.



No comments

Powered by Blogger.