Header Ads



நாட்டில் 1 சதவீத வாக்காளர்களை மட்டுமே UNP கொண்டுள்ளது


 ஐக்கிய தேசியக் கட்சி இன்னமும் நாட்டில் 1 சதவீத வாக்காளர்களை மட்டுமே கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிந்தனைகள் தொடர்பான கேள்விகளுக்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சி வீழ்ச்சியடைந்த பின் முன்னேற்றம் அடையவில்லை.


இலங்கையில் உள்ள ஏனைய அரசியல் கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியவையும் அவற்றின் வாக்காளர் தளத்தில் சரிவை எதிர்கொள்கின்றன.


அண்மைக்காலத்தில் கடுமையான சிரமங்களை எதிர்கொண்ட போதிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மட்டுமே வலுவாக வளர்ந்து வரும் ஒரே கட்சியாகும்.


ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றுடன் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்தாலும், அது இன்னும் 1% வாக்காளர் தளத்தையே கொண்டிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

1 comment:

  1. உமது பொஹொட்டுவயின் பொது மக்கள் செல்வாக்கை செயலில் காட்டுவதற்கு தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ரணிலிடம் எதுவும் தனக்குக் கிடைக்காது என்பது உறுதியானபின்னர் யூஎன்பீயை மட்டந்தட்ட தொடங்கியிருக்கின்றீர். உமக்குச் சரியான பாடத்தை நிச்சியம் பொதுமக்கள் வழங்க தருணம் பார்த்திருக்கின்றனர். கொஞ்சம் பொறுமையாக இரும்.

    ReplyDelete

Powered by Blogger.