ரணிலுக்கு மொட்டில் வேட்புமனு கிடைக்காது - Political Game ஆட முயற்சிக்கிறார்
மக்கள் ஆணையில்லாத ஒரு சிறு குழு,மின் கட்டணம்,நீர் கட்டணம்,எரிபொருள் விலை ஏற்றம்,வரியை அதிகரிப்பு,பொருட்களின் விலையை ஏற்றங்களை மோற்கொண்டு மக்களால் வாழ்க்கையை நடத்த முடியா மட்டத்தில் நாட்டு மக்களை நசுக்கி வருவதாகவும்,பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டால் மக்கள் அனுபவிக்கும் அழுத்தத்திற்கு ஏற்ப மக்களின் கருத்தை தெளிவாக புரிந்து கொள்ள முடியுமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வரவுசெலவுத் திட்டத்தில் பல்வேறு விடயங்கள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன என்றவாறு விசித்திரக் கதைகளை ஜனாதிபதி கூறிவருகிறார்.வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் பிறப்பிக்க வேண்டிய அனைத்து வரிகளையும் பிறப்பித்துள்ளார்.விற்பனைக்கான அனைத்து வளங்களும் விற்க திட்டமிடப்பட்டுள்ளது. அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.12,500 ரூபா அதிகரிப்பு போதுமா என்பதில் சிக்கல் உள்ளது.
முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளைக் கொண்டதாகும்.நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க புதிய வருமான வழிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். ஜனாதிபதி விக்கிரமசிங்க அவ்வாறான வழிகள் எதையும் குறிப்பிடவில்லை.
இவ்வருட வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இறுதி வரவு செலவுத் திட்டம் என்பதால் இந்த வரவு செலவுத் திட்டம் அரசாங்கத்தில் பிளவை ஏற்படுத்தும்.அரசியலமைப்பு பேரவையையும் ஆணைக்குழுக்களையும் உருவாக்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்த பிறகு ஐந்து சதத்துக்குக் கணக்கில் எடுக்காது செயற்படுகிறார்.ஜனநாயகம் குறித்து பேசிவிட்டு ஆட்சிக்கு வந்த பிறகு ஆட்சியை தக்கவைக்க பல்வேறு உத்திகளை கையாள்கின்றனர்.சர்வாதிகாரம், ஆணவம்,அடக்குமுறை போன்றவற்றின் ஊடாக நாட்டின் ஆட்சி நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒன்றரை வருடங்கள் கடந்துள்ளன.ஒவ்வொரு வார இறுதியிலும் அவர் வெளிநாடு செல்லவில்லை என்றால்,வேறு எங்காவது செல்வார். திருகோணமலைக்கு சென்ற ஜனாதிபதி திருகோணமலையை முதலீட்டு வலயமாக மாறும் என்று கூறினார்.இதுவரை எடுத்த எந்த நடவடிக்கையைம் இல்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வாதிகாரம், ஆணவம்,அடக்குமுறை ஆகியவற்றின் மூலம் நாட்டை ஆளும் முறைமையை பின்பற்றுகிறார்.
ஐக்கிய மக்கள் சக்திக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அஞ்சுகின்றார்.ஒரு குழுவை நியமித்து ஆய்வு செய்து,முடிவுகள் மாற்றப்பட்டு இப்போது ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்தால் வெற்றி பெறலாம் என்று காட்ட முயல்கின்றனர்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மொட்டில் வேட்புமனுக்கள் கிடைக்காது என தெரிய வந்துள்ளது.எனவே Political Game ஆடி ஏதுவான சூழலை உருவாக்கி,மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வருகின்றது.
இடதுசாரி அரசியலால் இலங்கையை கட்டியெழுப்ப முடியாது.நாட்டை கட்டியெழுப்ப வலதுசாரி அரசியல் தேவை. அவ்வாறானதொரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடிய குழு ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளது.
கிரிக்கெட் தொடர்பில் ஜனாதிபதிக்கும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் இடையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. நாம் அனைவரும் கிரிக்கெட்டை விரும்புகிறோம். இந்த விடயத்தில் பேச எனக்கு உரிமை உள்ளது.நான் இந்நாட்டில் டெஸ்ட் கிரிக்கெட் வீரரை உருவாக்கிய ஒருவர்.நான் ஊடகத்துறையில் பணியாற்றிய போதே நுவன் பிரதீபை கிரிகெட்டுக்கு கொண்டு வந்தேன். கிரிக்கெட் இருந்த இடத்திற்கு எங்களால் கொண்டு வர சரியான திட்டம் வேண்டும்.இதற்கு கிரிக்கெட் சட்டத்தை மாற்ற வேண்டும்.
கிரிக்கெட் என்பது 3 பிரபு குடும்பங்களால் கட்டுப்படுத்தப்படும் விளையாட்டு. கிரிக்கெட்டை கட்டமைக்கக்கூடிய நல்ல நிர்வாகிகள் குழு இப்போதைக்குத் தேவை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
Post a Comment