O/L பரீட்சை பெறுபேறுகள், வெளியாகும் திகதி அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் 2 அல்லது 3 நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றையதினம்(28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
செயன்முறைப் பரீட்சைகளில் ஏற்பட்ட தாமதமே பெறுபேறுகள் தாமதமடைவதற்கும் காரணம்.
Post a Comment