Header Ads



வெதமுலன மொட்டு Mp க்களை, கடுமையாக விமர்சித்த சஜித்


வெஸ்ட்மினிஸ்டர் சம்பிரதாயங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் வெதமுலன  சம்பிரதாயங்களை நடைமுறைப்படுத்திய மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்.


கட்சித் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியிலும் தனது பொறுப்பை நிறைவேற்றி,நாட்டு மக்கள் எதிர்நோக்கும் தேசிய மட்டப் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் முன்வைத்து,மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் மக்களுக்கு வழங்கப்படும் தீர்வுகள் குறித்த பிரவேசத்துக்கான கலந்துரையாடலையே 

நிலையியற் கட்டளைகள் 27 (2) இன் கீழ் தான் மேற்கொண்டு வருவதாகவும்,

குறித்த எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனி நபர்களின் தனிப்பட்ட விடயங்கள் எதுவும் எழுப்பப்படவில்லை என்றும்,

நாட்டைப் பாதிக்கும் தேசிய பிரச்சினைகளே முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


பொருளாதாரத்தை வங்குரோத்தாக்கியவர்கள் யார் என்று மக்கள் கேட்கும் போதும், பாராளுமன்றம் இதற்காக ஒரு தெரிவுக் குழுவை கூட நியமித்துள்ள வேளையிலும்,

சமீபத்தில் இலங்கை உயர் நீதிமன்றம் ஒரு வரலாற்றுத் தீர்ப்பை வழங்கி மஹிந்த ராஜபக்ச,கோட்டாபய ராஜபக்ச,பசில் ராஜபக்ச,

பி.பி.ஜயசுந்தர,அஜித் நிவார்ட் கப்ரால்,எஸ்.ஆர்.ஆடிகல,டபிள்யூ.டி.லக்ஷ்மன் மற்றும் நிதிச் சபை நாட்டை வங்குரோத்தாக்கியவர்கள் என்று அறிவித்து உயர்நீதிமன்றம் பதில் அளித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தலைவர் தெரிவித்தார்.


நாட்டை வங்குரோத்தாக்கியவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் குறித்த தரப்பினர் சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும்,

இந்நாட்டு மக்கள் பல தலைமுறைகளுக்கு இந்த இழப்பீட்டை ஈடு கட்ட  வேண்டியுள்ளதாகவும்,

பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி,இவர்கள் நாட்டை பல தசாப்தங்களுக்கு பின் தள்ளியுள்ளனர் என்றும்,

இவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டு இழப்பீடு எப்போது கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர் என்றும்,இவர்களோடு தொடர்பான பிரச்சினையை நேற்று (21) பாராளுமன்றத்தில் முன்வைத்த போது,இதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலர் இடையூறு செய்தனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


நேற்று பாராளுமன்றத்தில் ஏற்பட்ட நிலைமை தொடர்பில் இன்று(22) பாராளுமன்றத்தில் சிறப்புரிமை கேள்வியை முன்வைத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நிலையியற் கட்டளைகளில் குறிப்பிடப்படுவதாகவும்,சபா பீடத்தில் ஆளுங்கட்சியில் இருந்து எதிர்க்கட்சியை நோக்கி வந்து ரவுடித்தனமாக நடந்து கொண்ட சகல எம்பிக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,சபா பீடத்தில் எம்.பி.க்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு ? என்று சபாநாகரிடம் கேள்வியும் எழுப்பினார்.


தான் கையில் வைத்திருந்த ஆவணங்களை பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, பறித்து எடுத்தார் என்றும்,

பின்னர் ஜகத் சமரவிக்ரம அதை எடுத்துச் சென்றார் என்றும்,

அதன் பிறகு அவரிடமிருந்து அந்த ஆவணங்களை டி.வீரசிங்க பெற்றுக் கொண்டார்,பின்னர் பிரதமரும் சபை முதல்வரும் அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்று பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர கையளித்தார் என்றும்,இந்த செயலுக்கு பின்னால் ஒரு மறைகரம் இருந்ததாகவும்,இந்த கேள்வியை எழுப்பும் போது ஆளுங்கட்சியின் குழுவொன்று திட்டமிட்டு நடந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் சம்பிரதாய முறையை ஒத்த முறை மட்டுமே உள்ளதாகவும்,வெதமுலன சம்பிரதாயம் இங்கு இல்லை என்றும்,தான் எழுப்பிய கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லாத போது வன்முறையை பயன்படுத்தினார்கள் என்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.


எதிர்க்கட்சித் தலைவரின் கையில் இருந்த ஆவணங்களை பறித்துச் செல்லும் வரை படைக்கலசேவிதரின் அலுவலக ஊழியர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர் என கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்,இது தொடர்பான தீர்க்கமான முடிவொன்றை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்ததோடு,

தங்களது அதிகாரிகளால் இந்த பணியை செய்ய முடியாது என்றால் முடியாது என்று கூறுமாறும்,தனது பாதுகாப்பை பார்த்துக்கொள்ளுமாறு தன்னிடம் கூறுமாறும்,அதை தான் பார்த்துக் கொள்வதாகவும்,அது தொடர்பாக பிரச்சினை இல்லை என்றும்,தான் தனது பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சபாநாயகரிடம் தெரிவித்தார்.


தற்போது சனத் நிஷாந்தவிற்கு இரண்டு வாரங்கள் தடை விதித்துள்ளீர்கள் என்றாலும்,

பொருளாதார வங்குரோத்து நிலைமையுடன் தொடர்புடையவர்கள் குறித்து அரசாங்கம் எதுவும் கூறவில்லை என்றும்,வரவு செலவு திட்டத்துடன் தொடர்பான வாக்கெடுப்பிற்காக அவர்களை சபையில் வைத்துக் கொள்ளும் நோக்கிலா அவருக்கு இரண்டு வாரங்கள் தடை விதித்து, ஏனையோர் குறித்து எதுவும் கூறாமல் இருக்கிறீர்கள் என வினவுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.