ரணிலின் பட்ஐட் மீது, இம்தியாஸ் Mp கடும் தாக்குதல்
2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூல இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் (ஐந்தாம் நாள்) கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
பின்னர்,நாடாளுமன்ற ஆய்வுப் பிரிவு சம்பந்தப்பட்ட அமைச்சிடம் இந்த முன்மொழிவின் முன்னேற்றம் குறித்து வினவியபோது,ஒதுக்கீடுகள் பயன்படுத்தப்படவில்லை என்றும்,இதற்கான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த முன்மொழிவுகள் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படுவதற்கு முன்னர்,இந்த முன்மொழிவுகள் குறித்து ஆய்வுகள் நடத்தப்படாமல்,தயார்படுத்தாமல் அறிக்கைகள் வெளியிடப்படுகிறதா என்ற கேள்வி தெளிவாக எழுகிறது.
தொடர்ந்து உரையாற்றுகையில்;
சுதந்திர இலங்கையில்,இலங்கைப் பாராளுமன்றம் மற்றுமொரு வரவு செலவுத் திட்ட ஆவணத்தைப் பற்றி விவாதிக்கும் தருணம் இது.வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அனுபவத்தை இலங்கை எதிர்கொண்ட பின்னணியில் நிதி அமைச்சர் இந்த வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கிறார்.இன்று உலகில் வங்குரோத்தான நாடுகளில் ஒன்றாக நமது நாடு மாறியுள்ளது.வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் நாம் ஒரு பொருளாதார அவலத்தை எதிர்கொள்கிறோம்.
கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கும் போது நிதியமைச்சர் இந்த நிலையில் வீழ்ந்ததற்கான காரணங்களை விளக்கி,பாவங்களுக்குப் பரிகாரம் செய்துகொண்டது என் நினைவுக்கு வருகிறது.
அவருடைய பாவமன்னிப்பு உரையிலிருந்து மேற்கோள் காட்ட விரும்புகிறேன். நிதியமைச்சரின் சொந்த வார்த்தைகளில், நான் அதை மேற்கோள் காட்டுகிறேன்.1955 ஆம் ஆண்டை நினைவுகூர்ந்து…லீ குவான் யூ ஒருமுறை கூறினார்:சிங்கப்பூரில்,நான் கடினமான,ஆனால் சரியான பாதையைப் பின்பற்றினேன்.இலங்கையின் பண்டாரநாயக்கா,மக்கள் கோஷ பாதையைப் பின்பற்றினார்.லீ குவான் யூவின் உரையை மேற்கோள் காட்டி, நமது நிதியமைச்சர் தொடர்ந்து கூறுகிறார்: இந்த பிரபலமான பாதையில் தொடர்ந்தால், நாட்டிற்கு எதிர்காலம் இல்லை.”பிறரிடமிருந்து கடன் பெறுவதும்,சலுகை பெறுவதும் நாட்டுக்கு மேம்பாட்டை ஏற்படுத்தாது.புதிதாக சிந்திப்போம்.மனப்போக்கை மாற்றுவோம்” என்றார்.
மேற்கோள் முடிவு.
நிதியமைச்சர் கடந்த வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கும் போது, பண்டாரநாயக்க முகாமில் உள்ள பாரம்பரிய வாரிசுகளை தனக்கு அருகிலும்,தனக்குப் பின்னாலும் வைத்துக் கொண்டே பாவத்துக்கு பரிகாரம் கோரி இந்த அறிக்கையை வெளியிட்டார்.
கடந்த வரவுசெலவு திட்ட உரையில்,இந்த வங்குரோத்து நிலைக்கு வழிவகுத்த போக்கை அப்பட்டமாக கூறியிருந்தார்.இன்று,நமது நீதிமன்றம்,நமது நாடு வங்குரோத்தாகுவதற்கான உடனடி காரணங்களை வெளிப்படுத்தும் வரலாற்றுத் தீர்ப்பின் பின்னணியில் இந்த வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படுகிறது.இந்த நீதிமன்றத் தீர்ப்பு இலங்கையின் அரசியல் நோக்குநிலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நீதிமன்றத் தீர்ப்பாக இருக்கும் என நான் நம்புகிறேன்.இந்த நீதிமன்ற தீர்ப்பு அரசியல் நடத்தையின் பொறுப்புணர்வை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.
எந்த ஆய்வும்,அறிவியல் ஆய்வும் இன்றி எடுக்கப்பட்ட முடிவுகளால்,நாட்டின் தேசிய வருமானத்தில் பெரும் சதவீதத்தை இழந்து, மக்கள் மிகவும் வேதனையான சூழலையும், உலகத்தின் முன் அவமானகரமான சூழலையும் அனுபவிக்க நேரிட்டுள்ளது.இலங்கை பொருளாதார ரீதியில் தலை நிமிர வேண்டுமாயின் நாட்டை சரியான பாதைக்கு வழிநடத்த வேண்டும் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக,கோஷங்கள் மற்றும் விசித்திரக் கதைகளை உள்ளடக்கிய வழமையான,பாரம்பரியமான வரவு செலவுத் திட்ட உரைகளையே இலங்கையில் நாம் இன்னும் பார்க்கிறோம்.
கடந்த சில ஆண்டுகளாக,வரவுசெலவு திட்ட உரைகள் அதிக இலக்குகளைப் பற்றி பேசுகின்றன,என்றாலும் நாம் செயல்களையும் முடிவுகளையும் கவனிக்கும்போது, அந்த இலக்குகளை அடைவதில் தோல்வியைத் தொடர்ந்து காண்கிறோம்.வரவு செலவு திட்ட பற்றாக்குறை இடைவெளியை எடுத்துக் கொண்டாலும்,அரசின் வருமானத்தை எடுத்துக் கொண்டாலும்,அரச செலவினங்களை எடுத்துக் கொண்டாலும், வரவு செலவுத் திட்ட ஆவணங்களில் கூறப்பட்டுள்ள இலக்குகள் எட்டப்படவில்லை என்பதே நாம் காணும் யதார்த்தம்.
2023 வரவு செலவு திட்டத்தில் 2022 ஐ விட 65% வருவாய் அதிகரிப்பை எட்டுவது குறித்து அரசாங்கம் பேசியது.ஆனால்,அந்த இலக்கை நெருங்க முடியவில்லை.இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 2023 ஐ விட 45% வருமான அதிகரிப்பு குறித்து பேசுகிறது. அதாவது வருவாயை 4 டிரில்லியனாக அதிகரிப்பது என்பது ஒரு இலக்காகும்.
வரவு செலவுத் திட்ட உரைகளில் முன்வைக்கப்பட்ட இலக்கை எட்டவில்லை என்ற கதையுடன்,கடந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயும் போது, நடைமுறைப்படுத்தப்படாத பல பிரேரணைகளின் கதையையும் நாம் தெளிவாகக் காணலாம்.
அந்த முன்மொழிவுகளின் நடைமுறை யதார்த்தத்தை முன்வைக்க எனக்கு நேரமில்லை.
எனவே,உயர்கல்வி குறித்து, முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் குறித்து மட்டுமே சபைக்கு கூற விரும்புகிறேன்.
பாராளுமன்றத்தின் ஆய்வுப் பிரிவு மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களிடமிருந்து பெறப்பட்ட எழுத்துமூலத் தகவல்களின் அடிப்படையில் இந்த உண்மைகளை முன்வைக்கிறேன்.
2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட உரையில் கைதட்டல்களுக்கு மத்தியில் நிதியமைச்சர், “ருஹுணு மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகங்களுக்கு பட்ட பின் படிப்பு கற்கைகள் நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படும்.இதற்காக 60 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்” என்றார்.இது குறித்து அந்த பல்கலைக்கழக சமூகத்திடம் வினவினேன்.பின்னர்,பாராளுமன்ற ஆய்வுப் பிரிவு சம்பந்தப்பட்ட அமைச்சிடம் இந்த முன்மொழிவின் முன்னேற்றம் குறித்து வினவியபோது,ஒதுக்கீடுகள் பயன்படுத்தப்படவில்லை என்றும்,இதற்கான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த முன்மொழிவுகள் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படுவதற்கு முன்னர்,இந்த முன்மொழிவுகள் குறித்து ஆய்வுகள் நடத்தப்படாமல்,தயார்படுத்தாமல் அறிக்கைகள் வெளியிடப்படுகிறதா என்ற கேள்வி தெளிவாக எழுகிறது.
2023 வரவுசெலவுத் திட்ட உரையில், உயர்கல்வி பிரிவின் கீழ்,நிதி அமைச்சர் பின்வருமாறு கூறியிருந்தார்;
“வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்புகளை மேற்கொள்வதற்குத் தெரிவுசெய்யப்பட்ட 75 மாணவர்களுக்கு அவர்கள் தெரிவுசெய்யப்பட்ட கல்வித் துறைகளின் அடிப்படையில் 75 புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு நான் முன்மொழிகிறேன்”
2022 ஆம் ஆண்டு உயர்தரத்தில் சித்தியடைந்த தெரிவு செய்யப்பட்ட 75 மாணவர்களை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புமாறு கூறிய கருத்துக்கள் இன்று உண்மையாகிவிட்டுள்ளதா?ஏனைய முன்மொழிவுகளைப் போல இவை நிறைவேற்றப்படாத திட்டங்களா? போவது கேள்விக்குரிய விடயமாகும்.
பாராளுமன்ற ஆய்வுப் பிரிவு சமர்ப்பித்துள்ள அறிக்கையின் பிரகாரம்,இந்தப் பிரேரணையானது அதனை நிறைவேற்றும் திட்டத்துடன் செய்யப்பட்ட அறிக்கையல்ல, புலமைப்பரிசில்களுக்காக நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் முன்மொழிவு மட்டுமே எனத் தெரிகிறது.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் உயர்கல்வி விடயத்தின் கீழ் முன்மொழியப்பட்ட இலங்கையின் வரலாற்றை ஆராய்வதற்கான ஒரு நிறுவனம் ஸ்தாபிக்கப்படும் என கூறப்பட்டது. 75 ஆவது சுதந்திர தினத்தன்று ஆரம்பிக்கப்படும் என தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும்,கிடைக்கப்பெற்ற செய்திகளின்படி,இதற்காக ஒதுக்கப்பட்ட பணம் இதுவரை பயன்படுத்தப்படவில்லை என்றும்,நிறுவனம் ஆரம்பிக்கப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரியக் கிடைத்தது.
இவ்வகையில் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் கல்வி மற்றும் ஏனைய விடயப்பிரிவுகளுக்கு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட பெரும்பாலான முன்மொழிவுகள் வெறும் வார்த்தைகளில் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதை சுட்டிக்காட்ட முடியும்.
உயர்கல்வித் துறையில் உள்ள தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமலோ, துறைசார் அறிஞர்கள் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துக்களைப் பெறாமலோ, தயார்படுத்தாமலோ,முறையான ஆய்வு இல்லாமலோ,பல்வேறு நிறுவனங்களை நிறுவுவது குறித்து முன்மொழியப்படுவதை இந்த வரவு செலவு திட்ட உரையிலும் பார்த்தோம்.
இன்று நமது பொதுக் கல்வித்துறையிலும் உயர்கல்வித்துறையிலும் வரப்போகும் ஆபத்தான,கேடு விளைவிக்கக் கூடிய சூழ்நிலைகளின் ஆபத்தை பொறுப்பில் உள்ளவர்கள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.இந்த சபையில் சுகாதாரத்துறை குறித்து பலர் பேசினர். சுகாதாரத் துறையைப் போலவே,மனித வாழ்வுடன் தொடர்புடைய இன்றியமையாத துறையே கல்வித் துறையாகும்.நமது வருங்கால சந்ததியினரின் எதிர்காலம் தொடர்பான,துரதிஷ்டவசமான சூழ்நிலையில் விழும் அபாயகரமான சூழ்நிலைக்கு நாம் வந்துவிட்டோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆண்டுக்கு ஆண்டு பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும்,நாடு எதிர்நோக்கும் மூளைசாலிகள் வெளியேற்றம் காரணமாகவும், பல்கலைக்கழகங்களின் கல்விப் பிரிவுகளில் இருக்க வேண்டிய விரிவுரையாளர்கள் பற்றாக்குறை போலவே,நாட்டின் பொருளாதார நிலைமை காரணமாக மாணவர் சமூகம் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள்,மன அழுத்தங்கள் போன்றவற்றைப் பொறுப்புள்ள தரப்பினர் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.பாடசாலைகளிலும், பல்கலைக்கழக பிள்ளைகளும் தற்கொலை, மனநோயாளிகள்,மயங்கி விழுந்தும், பல வேளை உணவு உண்ணாமலும் இருப்பது போன்ற சம்பவங்களை அன்றாடம் பார்க்கிறோம்.நாட்டின் மக்கள்தொகையில் பாதிப் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளதாக உத்தியோகபூர்வ அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன.
நாடு முழுவதும் வெளிப்படும் இந்த உண்மைகளுக்கு புறம்பாக,நாட்டின் பிரபல ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஒரு ரோஜா மலர் பிம்பத்தை ஆட்சியாளர்கள்
கட்டமைத்து வருகின்றனர்.
“இப்போது எல்லாம் நன்றாக நிர்வகிக்கப்படுகிறது.2048 இல் நாடு மீண்டுவிடும்.உலகத் தலைவர்கள் எங்களுக்கு உதவுகிறார்கள்.இதனால் இப்போது எல்லாம் நன்றாக நடக்கிறது”என கூறி மறுபக்கம்,வீதிக்கு வந்து வலியை வெளிப்படுத்தும் மக்களை கொடூரமாக ஒடுக்குவதையும் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.
இப்போது, நாடு தவிர்க்க முடியாத முக்கியத் தேர்தல்களை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில்,உபாயங்களை மாற்றியமைத்து, தேர்தல் வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளதையே நாம் பார்க்கிறோம்.
பண பலத்தாலும்,ஆட்சி பலத்தாலும், ஊடகங்களிலும்,சமூக வலைதளங்களிலும், எந்த ஒரு போலி செய்தியை வெளியிட்டாலும், பரப்பினாலும்,இந்த சபையில் இருந்து கொண்டு என்ன மாய உலகங்களை உருவாக்கினாலும்,இறுதித் தீர்ப்பை மக்களே வழங்க வேண்டும்.மக்களின் அறிவுத்திறனை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது.அனைத்து அரசியல் தலைவர்கள் மற்றும் அனைத்து அரசியல் சக்திகளின் நிலையை இந்நாட்டு மக்கள் தற்போது நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.பல சமயங்களில் கோஷங்களாலும்,தேவதை உலகங்களாலும் ஏமாந்த மக்கள் இப்போது உரிய சந்தர்ப்பம் வரும் வரை காத்திருக்கிறார்கள்.
Post a Comment