ஒஸ்மானியாக் கல்லூரி மாணவர்களின் சாதனை - யாழ்ப்பாணம் சர்வதேச அமைப்பு (JMC-I) விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி
இதுகுறித்து யாழ்ப்பாணம் சர்வதேச அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
யாழ்ப்பாண முஸ்லிம்களின் குரலை சர்வதேச மயப்படுத்தும் உயர் நோக்குடன், உருவாக்கப்பட்ட எமது அமைப்பானது, யாழ்ப்பாண முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து வருகின்றது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
ஏற்கனவே யாழ் - ஒஸ்மானியா கல்லூரி உட்டகட்டமைப்பில், குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்துள்ள எமது அமைப்பு 2016 ஆம் ஆண்டிலிருந்து 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றும், மாணவர்களுக்கு இலவச வழிகாட்டல் கருத்தரங்குளையும் நடாத்தியிருந்து.
குறிப்பிட்ட புள்ளிகளுக்கு மேற் பெற்ற மாணவர்கள், அதற்காக உழைத்த ஆசிரியர்களுக்கும் ஊக்குவிப்பு பரிசில்களை கூட வழங்கியிருந்தது.
அந்த வகையில், இந்த வருடமும், பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு வழிகாட்டல் கருத்தரங்குகளை நடத்தியிருந்தது. அதன் பயனாக இம்முறை 5 மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை, எமக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்காக உழைத்த சகலருக்கும், எமது நன்றிகளை நல்குவதுடன், இதற்காக எமக்கு நிதிப் பங்களிப்புச் செய்தவர்களையும் இங்கு நன்றியுடன் ஞாபகப்படுத்துகிறோம்.
அதேவேளை யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கும், எமது சமூகத்தின் குரலை சர்வதேச மயப்படுத்தவும் நாம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்பதையும் இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
இங்கு
யாழ்ப்பாண சர்வதேச அமைப்பு - JMC - I
Post a Comment