Header Ads



வீட்டிலிருந்தபடியே HIV பரிசோதனை

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் 485 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


கடந்த வருடத்தை விட இந்த வருடம் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.


இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் இறுதி வரை, 485 புதிய எச்.ஐ.வி நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். 


கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது ஒரு அதிகரிப்பாக நாங்கள் பார்க்கிறோம். இவற்றில் 80% ஆண்கள் மத்தியில் பதிவாகியுள்ளது. எச்.ஐ.வி தொற்று 15-49 வயதிற்கு இடைப்பட்டவர்களிடையே அதிகமாக பரவி வருகிறது."


டிசெம்பர் முதலாம் திகதி உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு மக்களுக்கு அறிவூட்டும் விசேட வேலைத்திட்டமொன்றை எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் கலாநிதி ஜானகி விதானபத்திரன குறிப்பிட்டார்.


"பெரும்பாலான வேலைத்திட்டங்கள் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைச் சுற்றியே செய்யப்படுகின்றன, ஏனெனில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் அந்த இரண்டு பகுதிகளிலும் உள்ளன.


"சமூகத்தைக் காப்போம் - எய்ட்ஸ் நோயைத் தடுப்போம்" என்ற தொனிப்பொருளின் கீழ் வழங்கப்படும் மிகவும் சிறப்பான செய்தி, எச்.ஐ.வி பரிசோதனை செய்து உங்கள் நிலையை அடையாளம் காண்பதாகும்.


தேசிய STD எய்ட்ஸ் திட்டத்துடன் நாடு முழுவதும் 40 தேசிய STD கிளினிக்குகள் உள்ளன. வீட்டில் இருந்தபடியே எச்ஐவி பரிசோதனை செய்ய Know4Sure என்ற செயலியைப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது." என்றும் குறிப்பிட்டார். 


No comments

Powered by Blogger.